நிரூபிக்கும் முன்பு குற்றவாளி என்பது தவறு.. ரியா சக்ரவர்த்திக்காக வரிந்துக்கட்டும் டாப்ஸி!
மும்பை: குற்றவாளி என நிரூபிக்கப்படாத ஒருவரை தண்டிக்க நீதித்துறையை முந்தக்கூடாது என ரியா சக்ரவர்த்திக்கு ஆதரவாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சுஷாந்த் மரண வழக்கில் அவரது காதலியான ரியா சக்ரவர்த்தி மீதுதான் ரசிகர்களும் அவரது குடும்பத்தினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதற்கு பொறுத்தமாக ரியா சக்கவர்த்தி வாட்ஸ் அப் சாட்டுகள் வைரலாகி வருகிறது. சிபிஐயும் தொடர்ந்து 5 நாட்களாக ரியா சக்ரவர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகிறது.

பாலிவுட் பிரபலங்கள்
சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் ரியாவே சுஷாந்த் சிங் மரணத்திற்கு காரணம் என அவர் மீது குற்றம்சாட்டி வருகின்றனர். பாலிவுட் பிரபலங்கள் சிலரும் கூட ரியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து தெரிவித்து வருகின்றனர்.

லக்ஷ்மி மஞ்சு ஆதரவு
சில ஊடகங்கள் சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணையிலும் இறங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை லக்ஷ்மி மஞ்சு, ரியாவுக்கு ஆதரவாக டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். ரியாவை ஊடகங்கள் அரக்கி போல சித்தரிப்பதாகவும், இதனால் அவரது குடும்பம் எப்படியான வலியை அனுபவிக்கும் என்றும் கேட்டிருந்தார்.

தனிப்பட்ட முறையில் தெரியாது
உண்மை வெளியே வரும் வரை காத்திருங்கள் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை டாப்ஸியும் ரியா சக்ரவர்த்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். லக்ஷ்மி மஞ்சுவின் கருத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள டாப்ஸி, எனக்குத் தனிப்பட்ட முறையில் சுஷாந்தையோ, ரியாவையோ தெரியாது.

சட்டத்தை நம்புங்கள்
ஆனால் எனக்குத் தெரிந்த விஷயம் என்னவென்றால், குற்றவாளி என நிரூபிக்கப்படாத ஒருவரைத் தண்டிப்பதற்காக நீதித்துறையை முந்திக்கொள்வது எவ்வளவு தவறு என்பதைப் புரிந்துகொள்ள மனிதம் போதும். உங்களின் நல்லறிவுக்காகவும், இறந்தவரின் கண்ணியத்துக்காகவும் உங்கள் நாட்டின் சட்டத்தை நம்புங்கள் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











