இப்போதைக்கு திருமணம் இல்லை… நிறைய சாதிக்க வேண்டும்… டாப்ஸி பதில்!
சென்னை : தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த டாப்ஸி தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
என் பெற்றோர் மற்றும் நண்பர்கள் பலரும் திருமணம் எப்போது என்று கேட்டு வருவதாகவும் கூறியுள்ள டாப்ஸி.
திருமணம் குறித்து பல தகவல்களை மனம் திறந்து பேசி உள்ளார்.

சிறப்பான நடிப்பு
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷூ நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தில், உருட்டிவைத்த வெண்ணைப்போல இருந்து தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அனைவரும் புகழும் படி கொடுத்திருப்பார் டாப்ஸி. இப்படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

வெற்றி பெற்றது
ஆடுகளம் படத்திற்கு பிறகு தமிழில் சரியாக அமையாததால் தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் பல திரைப்படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஹசீன் தில்ரூபா நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியானது. கணவனை கொலை செய்யும் பெண் கேரக்டரில் டாப்ஸி மிரட்டி இருப்பார். அவள் ஏன் கொலை செய்கிறார் என்பதை மிகவும் சாமர்த்தியமாக எதிர்பாராத திருப்பத்துடன் படம் முடிகிறது.

நிறைய சாதிக்க வேண்டும்
டாப்ஸி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தன்னுடைய திருமணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். என் பெற்றோர் திருமணம் செய்து கொள் என்கின்றனர். நான் எப்போது திருமணம் செய்து கொள்வேன் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள். சினிமாத்துறையில் நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். இன்னும் சில வரையறைகளை நான் எட்ட வேண்டும். தற்போது நான் வருடத்திற்கு இரண்டு மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறேன். அந்த நிலை மாற வேண்டும் ஐந்து, ஆறு படங்களில் நான் நடிக்க வேண்டும். இந்த நேரத்தில் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நான் நுழைவதற்கோ நேரத்தை செலவிடுவதற்கோ போதிய நேரம் இல்லை என்றார்.

தெலுங்கு படத்தில்
தற்போது டாப்ஸி, சபாஷ் மித்து, கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். தமிழில் ஜன கண மன போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், மிஷன் இம்பாசிபிள் என்ற தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.


Click it and Unblock the Notifications











