எவ்வளவு பணம் வாங்குனீங்க..? நீங்க இந்தியர் தானா..? கேள்விகேட்டவரை விளாசித்தள்ளிய நடிகை டாப்ஸி
மும்பை: நீங்கள் இந்தியர் தானா? என்று கேள்விகேட்டவருக்கு நடிகை டாப்ஸி சூடான பதில் கொடுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் நேற்று ஒரு கும்பல் நுழைந்தது. முகத்தை துணியால், மறைத்து இரும்பு கம்பிகள் மற்றும் கம்புகளுடன் நுழைந்த அந்தக் கும்பல், மாணவர்களை சரமாரியாகத் தாக்கியது.
விடுதியை அடித்து நொறுக்கிய அந்த கும்பல் வெறியாட்டம் நடத்தியது. இந்த தாக்குதலில் மாணவர் சஙகத் தலைவர் அயிஷ் கோஷ் மண்டை உடைந்தது. சுமார் 30 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

கடும் கண்டனம்
மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தீவிரவாத தாக்குதலை ஞாபகப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார், மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே.

இந்தியர் அபிஜித்
ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் நடந்ததை போன்ற சம்பவங்கள் இந்தியாவில் நடக்க தொடங்கியுள்ளதாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு நடிகர், நடிகைகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அனுராக் காஷ்யப்
இந்நிலையில், மும்பையில் கேட்டர் சாலையில் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி, சோயா அக்தர், அனுபவ் சின்ஹா, தியா மிர்ஸா உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

பொறுப்பில்லை
இதையடுத்து நடிகை டாப்ஸியின் சமூக வலைத்தளப் பக்கத்தில் பலரும், அவரை ட்ரோல் செய்யத் தொடங்கினர். உங்களுக்குப் பொறுப்பில்லை, இப்படி நடந்துகொள்வது சரியில்லை என்கிற ரீதியில் அவரை திட்டியிருந்தனர்.
Ab tumhaare ko bhi paper dikhaane hai kya ? https://t.co/cinxcQ3x7y
— taapsee pannu (@taapsee) January 6, 2020
ஐடி கார்டு
ஓட்டலில் தங்கும்போது ஐடி கார்டு காண்பிக்க வேண்டியிருக்கிறது. நாட்டில் இருப்பவர்கள் இந்தியர்தான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று ஒருவர் கேட்டிருந்தார். பலரும் அவரை திட்டி பதிவிட்டிருந்தனர்.
இந்தியர் தானா?
மற்றொருவர், நீங்கள் இந்தியர் தானா? என்று கேட்டிருந்தார். இதனால் கடுப்பான டாப்ஸி, உங்களுக்கும் நான் பேப்பரையெல்லாம் காண்பிக்க வேண்டுமா? என்று கோபமாக கேட்டிருந்தார்.
இன்னொரு பெண், 'சகோதரி, அந்த ட்வீட்டுக்கு பணம் வாங்கிட்டீங்கள்ல?' என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த டாப்ஸி, இல்லை சகோதரி, என் மனசாட்சியை வாங்குவதற்காக நீங்கள் குறிப்பிட்டிருந்த பணம் குறைவாக இருந்தது. அதனால் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டேனே என்ற டாப்ஸி, அடுத்த முறையாவது கொஞ்சம் நல்லதா யோசிச்சு சொல்லுங்க' என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இது பொருத்தமான பதில் என்று டாப்ஸியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











