அப்போ கத்ரீனா இப்போ யார் தெரியுமா.. 90ஸ் கிட்ஸ் ஃபேவரட்.. விஜய் சேதுபதி கொடுத்து வைத்தவர்

சென்னை: மகாராஜா படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் லீட் ரோலில் நடித்து முடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து தெலுங்கு நடிகர் பிரபாஸ் படத்தில் பவர் புல்லான வில்லன் கதாப்பாத்திரம் ஏற்று நடிப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் 90களில் இளைஞர்களை கவர்ந்த கனவுக்கன்னி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் இவரா என்று ஆச்சரியமடைந்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கில் வெளியான உப்பனா படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். இதில் அவரது நடிப்பை பார்த்து பலரும் வியந்து பாராட்டினார்கள். தெலுங்கில் கோலோச்சி இருக்கும் சிரஞ்சீவி ஃபேமிலியில் ஒருவராகவும் விஜய் சேதுபதி இருக்கிறார். அதைத்தொடர்ந்து தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட்டிலும் பார்சி வெப் தொடர் மூலம் பிரபலம் அடைந்தார். இதன் பின்பு ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்படம் 1000 கோடி வசூலை தொட்டு பாலிவுட்டையே கலங்கடித்தது. இப்படத்திற்காக விஜய் சேதுபதி மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்றதாகவும் கூறப்படுகிறது.

actress-tabu-to-star-in-vijay-sethupathis-new-film

கத்ரீனாவின் ரசிகன்: பாலிவுட்டில் ஷாருக், ஷாகித்துடன் இணைந்து நடித்த விஜய் சேதுபதி யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு வெளியானது. பாலிவுட்டின் கனவுக்கன்னி கத்ரீனா கைஃப்புடன் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் ஜோடியாக நடித்தார். அந்ததுன் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பேசிய விஜய் சேதுபதி கத்ரீனா கைஃபை வெட்கப்பட வைத்தார். அந்த நிகழ்வில் பேசிய விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் உடன் பணிபுரிவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. அவரின் தீவிர ரசிகை நான். அவர் அழகானவர் மட்டுமல்ல. சிந்தனைமிக்க நடிகையும் என்று கூறியதை கேட்டு கத்ரீனா தனது அழகால் வெட்கப்பட்டார். இதுதொடர்பான வீடியோக்களும் வைரலானது. மெர்ரி கிறிஸ்துமஸ் படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றாலும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

actress-tabu-to-star-in-vijay-sethupathis-new-film

குடும்ப படம்: விடுதலை, விடுதலை 2 படத்தின் மூலம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி நடிப்பு அரக்கன் என நிரூபித்து காட்டியவர் விஜய் சேதுபதி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாராவின் Rowdy Pictures நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இப்படத்தை ஹரி இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இப்படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே சத்தமே இல்லாமல் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கிறார். கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. பாண்டிராஜ் படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது படத்தை குடும்பத்தோடு ரசிக்கும் படியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கடைக்குட்டி சிங்கம் போன்ற படத்தை போன்று இப்படமும் விஜய் சேதுபதிக்கு ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு ரஜினி பட டைட்டிலை வைக்க இருப்பதாகவும் பேச்சு அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

கமர்ஷியல் ராஜா: சமீபத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இப்படத்தை தெலுங்கி்ல் மா்ஸ் என்டர்டெய்னர் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் பூரிஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியானது. இப்படத்தை, சிம்பு பட நடிகை சார்மி கவுர் தயாரிக்கிறார். தமிழில் வெளியான போக்கிரி, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற படங்களை தெலுங்கில் இயக்கி வெற்றி பெற்றவர் பூரி ஜெகன்நாத். தெலுங்கு போக்கிரிக்கு பிறகே தமிழில் விஜய் நடித்தார். மகேஷ் பாபு, பவன் கல்யாண், அல்லு அர்ஜூன் போன்ற சூப்பர் ஸ்டார் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய இஸ்மார்ட் சங்கர் படம் மிகப்பெரிய ஹிட் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிையில், இப்படத்தில் மற்றொரு பிரபலமும் இணைந்திருக்கிறார்.

actress-tabu-to-star-in-vijay-sethupathis-new-film

90ஸ் கிட்ஸ் ஹீரோயின்: பூரிஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் சேதுபதியை தொடர்ந்து ஸ்டார் நடிகர்களுக்கு டஃப் கொடுத்த கனவுக்கன்னி ஒருவர் இப்படத்தில் இணைந்திருக்கிறார். காதல் தேசம் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த தபு தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 90ஸ் கிட்ஸ்களை கிறங்கடித்தவர். வயது ஆனாலும் அழகு குறையாத தபுவின் மார்க்கெட் பாலிவுட்டில் ஏற்றத்தில் இருக்கிறது. வெப் தொடர், க்ரைம் த்ரில்லர் படங்களில் நடித்து தனக்கான இடத்தை தக்கவைத்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தென்னிந்திய பக்கம் திரும்பியிருக்கிறார் தபு. விஜய் சேதுபதி -தபு காம்போ கண்டிப்பா ஹிட் அடிக்கும் என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இதுதொடர்பான புகைப்படத்தை சார்மி கவுர் வெளியிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X