உலகின் 5வது பெரிய வைரமா?யார் சொன்னா..அது வைரமே இல்ல.. உண்மையை உடைத்த தமன்னா!

சென்னை: சில நேரம் நடிகர், நடிகைகள் பற்றி பரவும் வதந்திகளை பார்க்கும் போது, யாருடா இப்படி எல்லாம் டிசைன் டிசைனா யோசிக்கிறீங்க என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

அப்படித்தான் நடிகை தமன்னா அணிந்து இருந்த நகை குறித்து ஒரு செய்தி கடந்த இரண்டு நாட்களாக சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்து வருகிறது.

இணையத்தில் பரவி வரும் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை தமன்னா விளக்கம் கொடுத்துள்ளார்.

Actress Tamanna Bhatia dismisses reports of diamond ring

நடிகை தமன்னா: பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என கலக்கி வரும் நடிகை தமன்னா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் மோகன் லால், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என பலர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 10ந் தேதி வெளியாக உள்ளது.

போல ஷங்கர்: இந்த படத்தைத் தொடர்ந்து மெகா சூப்பர் ஸ்டார் சீரஞ்சீவிக்கு ஜோடியாக போல ஷங்கர் படத்தில் நடித்து உள்ளார். இத்திரைப்படம் அஜித் குமார், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் நடித்த வேதாளம் திரைப்படத்தின் ரீமேக்காகும். இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ள நிலையில் இப்படம் ஆகஸ்ட் 11ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகிலேயே 5வது பெரிய வைரம்: அடுத்தடுத்து இரண்டு ஸ்டார் நடிகர்களின் படத்தில் நடித்து தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோதிரம் அணிந்து கொண்டு இருக்கும் போட்டோவை பகிர்ந்து இருந்தார். அந்த போட்டோவைப் பார்த்த பலர் அது உலகிலேயே 5வது பெரிய வைரம் என்றும் அதன் மதிப்பு மட்டும் ரூ 2 கோடி என்றும், இதை ராம்சரணின் மனைவி உபாசனா பரிசளித்ததாகவும் கடந்த இரண்டு தினங்களாக செய்தி பரவியது.

அது வைரமே இல்லை: இந்த பொய்யான செய்தியைப் பார்த்து டென்ஷனான தமன்னா, அந்த புகைப்படத்தை பகிர்ந்து, அது வைர டிசைன் கொண்ட பாட்டில் ஓப்பனர் என்றும் அது வைரமே இல்லை என்றும் தாறுமாறாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் அடேங்கப்பா அதுக்குள்ள என்னம்மா கலர் கலரா ரீல் சுத்தினீங்க என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X