தமன்னா காதலரை பிரிந்து விட்டாரா? அந்த பதிவுக்கு அர்த்தம் என்ன? குழம்பும் ரசிகர்கள்!

சென்னை: பாலிவுட், கோலிவுட், டோலிவுட்டில் அடுத்தடுத்த படத்தில் பிஸியான நடிகையாக நடித்து வரும் தமன்னா. எந்த சர்ச்சையிலும் சிக்காத நடிகையாக வளர்ந்து வந்தார். இவர் லஸ்ட் ஸ்டோரீஸ் 2ல் நடித்த போது விஜய் வர்மாவை காதலிப்பதாக கூறினார். இதையடுத்து இவர்களின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நேரத்தில், தமன்னா, விஜய் வர்மா இடையில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. அதற்கு காரணம் தமன்னாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் தான்.

நடிகை தமன்னா, 'கேடி' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பின் வியாபாரி, கல்லூரி போன்ற படங்களில் நடித்து வந்த தமன்னா, தெலுங்கு படங்கள் சிலவற்றிலும் நடித்தார். அவர் நடித்த, படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, பையா, சிறுத்தை, வீரம் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. இவர் நடித்த பாகுபலி படம் தமன்னாவை பாலிவுட் வரை கொண்டு சென்றது. அங்கும் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இப்போது, தமிழில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், இந்தி திரையுலகில் ஜொலித்து வருகிறார் தமன்னா.

tamannaah bhatia vijay varma breakup

நடிகை தமன்னா: லஸ்ட் ஸ்டோரீஸ் 2ல் நடித்த போது விஜய் வர்மாவிடம் காதல் வயப்பட்ட தமன்னா, அவருடன் ரகசியமாக டேட்டிங் சென்று வந்த நிலையில் திடீரென ஒரு பேட்டியில் அவரை காதலிப்பதாகவும், எத்தனையோ படத்தில் நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன். ஆனால், அவருடன் நடித்த போது தான் இவர் எனக்கானவர் என்று கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து இவர்களின் திருமணத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், நடிகை தமன்னா, காதல் முறிந்துவிட்டதை சுட்டிக்காட்டும் வகையில் இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளதாக இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது.

காதலை பிரிந்தாரா: தமன்னா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், 'காதலை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை, எதிரில் உள்ளவர்களுக்கு ரகசிய ஆர்வத்தைக் காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. ஒருவர் உங்களை அழகாகப பார்க்க வேண்டுமென்றால், முதலில் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அழகாகப் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்' என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவினைப்பார்த்த ரசிகர்கள், தமன்னாவிற்கு என்ன ஆச்சு என்றும், காதல் பற்றி இப்படி ஒரு பதிவை போட காரணம் என்ன என்று கேட்டு வருகின்றனர். ஒருவேளை தமன்னா காதலர் விஜய் வர்மாவை பிரிந்து விட்டாரா? என யூகத்தின் அடிப்படையில் பல வதந்திகள் பரவி வருகிறது.இணையத்தில் இப்படி ஒரு செய்தி பரவியதைத் தொடர்ந்து தமன்னா அந்த ஸ்டோரியை டெலிட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X