Tamannaah: ஃப்ரஷ்ஷாக சினிமாவிற்குள் நுழைந்த தமன்னாவை காதல் வலையில் வீழ்த்தி கைவிட்ட நடிகர்!
சென்னை: தென்னிந்திய சினிமா பிரபலமாக மட்டும் இல்லாமல் தற்போது இந்திய அளவில் சினிமா ஸ்டாராக வலம் வருகின்றார் நடிகை தமன்னா. இன்றைக்கு இவர் எதாவது படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடினாலே படம் ஹிட் எனக் கூறும் அளவிற்கு கவர்ச்சியை எவ்வளவு காவாலா எனக் கேட்டு தாரளமாக கொடுத்து நடித்து வருகின்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே தமன்னாவுடன் நடனமாட வாய்ப்பு கிடைக்கவில்லையே என ஏங்கியதை மேடையிலேயே சொல்லியுள்ளார்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க லஸ்ட் ஸ்டோரீஸில் தமன்னா தனது காதலர் விஜய் வர்மாவுடன் இணைந்து நடித்திருந்த காட்சிகள் எல்லாம் கவர்ச்சியில் உச்சம் என்றே கூறலாம். சினிமா உலகினைப் பொறுத்தவரை ஒரு நடிகை கவர்ச்சியில் களம் இறங்கிவிட்டால் சில ஆண்டுகளில் காணாமல் போய்விடுவார். ஏனென்றால் அதன் பின்னர் வேறொரு கதாநாயகி அவங்க என்ன கவர்ச்சி காட்டுறாங்க நான் காட்டுறேன் பாருங்க என இழந்த மார்க்கெட்டினைப் பிடிக்க கவர்ச்சியில் களமிறங்கிவிடுவார்கள். ஆனால் ஒரு படத்தின் கதை கவர்ச்சியான காட்சிகளை நிர்பந்திக்கும்போது நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பார்கள்.

இந்த வகையில் நடிகை தமன்னா இரண்டாவது ரகம் கவர்ச்சியான காட்சிகள் படத்திற்கு தேவைப்படுகின்றதா என்பதை நன்கு உணர்ந்து கவர்ச்சியாக நடிக்க சம்மதம் தெரிவிப்பதால் தமன்னா இன்னும் சினிமா உலகில் நீடித்து வருகின்றார். குறிப்பாக லஸ்ட் ஸ்டோரீஸில் அவர் காட்டிய கவர்ச்சி என்பது இதுவரை எந்த முன்னணி கதாநாயகிகளுமே காட்டிடாத கவர்ச்சி என்பதால், அவ்வளவுதான் இனி தமன்னா ஓரம் கட்டப்பட்டுவிடுவார், அவரிடம் சரக்கு தீர்ந்துவிட்டது என நினைத்தார்கள்.

உச்சகட்ட கவர்ச்சி: ஆனால் லஸ்ட் ஸ்டோரீஸில் தமன்னா காட்டிய கவர்ச்சி என்பது அந்த கதைக்களத்திற்கு தேவையானது என்பதால் தமன்னா இன்னும் கொடிகட்டி பறந்து கொண்டு உள்ளார். தமன்னா தமிழ் சினிமாவில் அறிமுகமான காலத்தில் சன் பிக்சர்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார். இதனால் இவர் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது.

கனவுக் கன்னி: ஒரு நடிகையின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கின்றது என்றால், அவர் குறித்த கிசுகிசுக்கள் வரத்தானே செய்யும். அப்படி தமன்னாவின் ஆரம்பகால சினிமாவில் எவர் க்ரீன் சூப்பர் ஹிட் படம் ஒன்றில் நடித்திருந்தார். படம் முழுக்க அவருக்கு காதல் காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் தமன்னா நடிப்பால் பலரது கனவுக் கன்னியாகவே மாறினார். இந்த படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் தமன்னாவின் அழகை மேலும் மேலும் ரசிக்கச் செய்தது.

நடிகருடன் காதல் கிசுகிசு: இந்த படத்தில் நடித்தது, தற்போது முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக மாறுவதற்கு தொடந்து முயற்சிகளை எடுத்து வரும் நடிகர்தான். இந்த படத்தில் மட்டும் இல்லாமல் இருவருக்கும் தனிப்பட்ட முறையிலும் கெமிஸ்ட்ரி ஒத்துப்போனதால், இருவரும் மனம் விட்டு நேசிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் இவர்கள் விஷயத்தை எப்படியோ மோப்பம் பிடித்த நடிகர் தந்தை, ராமாயணம் மகாபாரதக் கதைகளைச் சொல்லி நடிகரின் மனதை மாற்றியுள்ளார். தற்போது நடிகர் மேற்கு மாவட்டத்தில் தனது சொந்தத்தில் உள்ள பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார். இவர்களின் காதலைப் பிரித்தது மட்டும் இல்லாமல் தனது மகனுக்கு சொந்தத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தது குறித்து இப்போதும் காலரைத் தூக்கிவிட்டு சொல்லிக்கொள்கின்றாராம் நடிகரின் தந்தை.

100 கோடி: இதனை எதிர்பார்க்காத நடிகை மனமுடைந்து காணப்பட்டார். ஆனால் அதில் இருந்து மீண்டு வந்த தமன்னா தற்போது தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக இந்திய சினிமாவிலேயே ஒரு கலக்கு கலக்கி வருகின்றார். அண்மையில் தமன்னா நடிப்பில் வெளியான அரண்மனை 4 ரூபாய் 100 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியானது.


Click it and Unblock the Notifications











