தமன்னாவிற்கு டைம் சரியில்லை.. அந்த விளம்பரத்தால் வந்த வினை.. 5 மணி நேரம் சிக்கித் தவிச்சிட்டாராம்!
சென்னை: கோலிவுட்,பாலிவுட் என கலக்கி வரும் நடிகை தமன்னா, விளம்பரம் ஒன்றில் நடித்து தற்போது சட்ட சிக்கலில் சிக்கி உள்ளார். அசாமில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணைக்கு நடிகை தமன்னா தனது பெற்றோருடன் சென்று இருந்தார். இந்த செய்தி தமன்னாவின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் திரைப்படங்களில் நடித்து அனைவரும் விரும்பும் நடிகையாக இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சரிந்து இருந்த இவரின் மார்க்கெட் இன்று உச்சத்தில் உள்ளது. அதற்கு காரணம் லஸ்ட் ஸ்டோரீஸ், ஜீ கர்தா உள்ளிட்ட வெப் தொடர்களில் அளவுக்கு மீறி கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். இதன் மீண்டும் இவருக்கு படவாய்ப்பு வர, ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அனைவரின் வாயையும் பிளக்க வைத்தார்.

நடிகை தமன்னா: இதைத்தொடர்ந்து இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக, எட்டு முழப்புடவை சுற்றிக்கொண்டு கவர்ச்சி காட்டாமல் நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்றது. படம் முழுக்க கவர்ச்சி காட்டாமல் நடித்த தமன்னா தனது ரசிகர்களுக்கான கடைசியில் இறங்கி கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார்.அந்த ஆட்டத்தை பார்க்க பல இளசுகள் அரண்மனை 4 படத்தை கடைசி வரை பார்த்து பார்த்து ரசித்தனர்.
விளம்பரத்தால் வந்த வினை: படம் விளம்பரம் என மீண்டும் ஒரு பாமுக்கு வந்துள்ள தமன்னா, ஐபிஎல் போட்டிகளை ஃபேர்பிளே செயலியில் சட்ட விரோதமாக ஒளிபரப்பியதாக மகாதேவ் HPZ TOKEN செயலி நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது. இதையடுத்து கடந்தாண்டு பண மோசடி வழக்குப் பதியப்பட்டு ஓராண்டாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அந்நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்து வந்த நடிகை தமன்னா, அந்த நிறுவனத்தின் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதால், விசாரணைக்கு ஆஜராகுமான அமலாக்கத்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது.
5 மணி நேரம் விசாரணை: இதையடுத்து, நடிகை தமன்னா தனது பெற்றோருடன் அசாமிற்கு சென்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். நேற்று பிற்பகலில் ஆஜரான தமன்னாவிடம் 5 மணிநேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. . தமன்னாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றும் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











