பலமுறை திருமணம் செய்து கொண்டதாக உணர்கிறேன்.. வதந்தியால் டென்ஷனான தமன்னா!

சென்னை : இணையத்தில் பரவும் திருமண வதந்தியால் பலமுறை திருமணம் செய்து கொண்டதாக உணர்கிறேன் என நடிகை தமன்னா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

முன்னணி நடிகையான தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி,கன்னட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

பாலிவுட்டின் பிரபல நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வருவதாக பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகை தமன்னா

நடிகை தமன்னா

நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டியில், நடிகர் விஜய் வர்மாவுடன் ஒரு படத்தில் தான் நான் நடித்திருக்கிறேன். அதற்குள் அவருடன் காதல், டேட்டிங் என்று செய்திகள் பரவி வருகிறது. இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். இருந்தாலும், இது போன்ற வதந்திகளை பார்க்கும் போது சற்று வருத்தமாகவே இருக்கிறது.

பலமுறை திருமணம்

பலமுறை திருமணம்

சினிமாவில் மட்டும் நடிகர்களை விடவும் நடிகைகளே அதிக திருமண வதந்திகளில் சிக்குகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்பதும் எனக்கு சரியாக தெரியவில்லை. எனக்கு திருமணம் நடப்பதற்கு முன்பே, டாக்டர், தொழிலதிபர் என பலருடன் பலமுறை எனக்கு திருமணம் செய்து வைத்து இருக்கிறார்கள். எனக்கு உண்மையாகவே திருமணம் நடந்தாலும் அதை ரசிகர்கள் நம்புவார்களா? எனத் தெரியவில்லை என்று வதந்தியால் நான் பாதிக்கப்பட்டது குறித்து பேசினார்.

லிப் கிஸ் கொடுத்த வீடியோ

லிப் கிஸ் கொடுத்த வீடியோ

நடிகை தமன்னா கோவாவில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் வர்மாவுடன் கலந்துக் கொண்டார். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் லிப் கிஸ் கொடுத்த வீடியோ வெளியாகி ட்ரெண்டானது. இதனால், விஜய் வர்மாவும் தமன்னாவும் டேட்டிங்கில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளதாகவும் வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் படத்தில்

ஜெயிலர் படத்தில்

தமன்னா தற்போது ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 70 சதவீத படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் ஷிவா ராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதில் ரஜினியின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. மேலும் சுந்தர் சியின் அரண்மனை 4 படத்தில் தமன்னா கமிட்டாகி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X