Lust stories 2: படுக்கையறை காட்சிகளை குடும்பத்தோடு பார்க்க அசவுகரியமாக இருந்தது.. நடிகை தமன்னா!

சென்னை: லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தை எனது குடும்பத்துடன் பார்த்த போது நான் மிகவும் அசவுகரியமாக இருந்தேன் என்று தமன்னா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தமன்னா. அதன்பின்னர் அயன், பையா, சுறா, சிறுத்தை என பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் நடித்த தமன்னாவுக்கு தமிழில் படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தியில் அத்தமீறி கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

லஸ்ட் ஸ்டோரீஸ்: கடந்த 2018 ஆம் ஆண்டு 'லஸ்ட் ஸ்டோரீஸ்' தொடரின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனையடுத்து இதன் இரண்டாம் பாகம் நான்கு கதைகளை கொண்ட ஆந்தாலஜி கதையாக வெளியாகி உள்ளது. இந்த வெப்தொடரில் மிர்ணாள் தாகூர், தமன்னா,காஜல் ஆகியோர் நடித்துள்ளனார். இதில், படுக்கையறை காட்சிகள் மிகவும் ஆபாசமாக இருப்பதாக பலரும் விமர்சனம் எழுந்து வருகிறது.

Actress tamannaah Bhatia speech about Lust Stories 2 bedroom scene

அசவுகரியமாக உணர்ந்தேன்: இந்நிலையில், நடிகை தமன்னா அண்மையில் அளித்துள்ள பேட்டியில், லஸ்ட் ஸ்டேரிஸ் 2-ல் நான் நடித்த காட்சிகள் பேசுபொருளாக மாறியுள்ளது. என்னைப் பொறுத்தவரை நான் ஒரு நடிகையாக என் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறேன். மேலும், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 காட்சிகளை எனது குடும்பத்துடன் பார்த்த போது மிகவும் சிரமப்பட்டேன், படபடப்புடன் அசவுகரியமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.

அசவுகரியமாக உணர்ந்தேன்: இந்நிலையில், நடிகை தமன்னா அண்மையில் அளித்துள்ள பேட்டியில், லஸ்ட் ஸ்டேரிஸ் 2-ல் நான் நடித்த காட்சிகள் பேசுபொருளாக மாறியுள்ளது. என்னைப் பொறுத்தவரை நான் ஒரு நடிகையாக என் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறேன். மேலும், லஸ்ட் ஸ்டோரிஸ்2 காட்சிகளை எனது குடும்பத்துடன் பார்த்த போது மிகவும் சிரமப்படுவேன், படபடப்புடன் அசவுகரியமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.

அனைவரும் பார்க்க வேண்டும்: ஆனால், நான் ஒரு நடிகையாக மகிழ்ச்சி அடைகிறேன். செக்ஸ் பற்றிய புரிதல் அனைவருக்கும் தெரியவேண்டும். செக்ஸ் பற்றி பேசுவதை முட்டாள்தனமாக நினைக்கிறோம். அதை ஒதுக்கி வைக்க வேண்டும். ஒரு மனிதனின் அனைத்து தேவைகளை போல அதுவும் ஒன்று தான் என கூறினார். லஸ்ட் ஸ்டோரிஸ்-2வை ரசிகர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்று தமன்னா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X