Tamannaah: கடற்கரை மணலில் கோலம் போடும் தமன்னா.. மாலத்தீவில் கொண்டாட்டம்!

சென்னை: நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தமன்னா நடிப்பில் ஜெயிலர் படம் வெளியானது. இதில் தமன்னா ஆட்டம் போட்ட காவாலா பாடல் யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை கடந்தது.

Actress Tamannaah celebrates her holidays in Maldives

அடுத்ததாக சுந்தர் சியுடன் அரண்மனை 4 படத்தில் நடித்து முடித்துள்ளார் தமன்னா. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது.

மாலத்தீவில் நடிகை தமன்னா விடுமுறை கொண்டாட்டம்: நடிகை தமன்னா கேடி படம் மூலம் தமிழில் கடந்த 2007ம் ஆண்டில் அறிமுகமானார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த தமன்னா, விஜய், விஷால், ஜெயம் ரவி, கார்த்தி, சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். சூப்பர்ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் இவரது ஆசை சமீபத்தில் வெளியான ஜெயிலர் படம் மூலம் நிறைவேறியுள்ளது. படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் தமன்னா.

ஜெயிலர் படத்தில் நடிகையாகவே நடித்துள்ளார் தமன்னா. இவரது காவாலா பாடல் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்துள்ளது. இந்தப்பாடலில் ரஜினியும் ஆட்டம் போட்டுள்ளார் என்றபோதிலும், தமன்னா இந்தப் பாடலில் அதிகமாக ஸ்கோர் செய்துள்ளார். இந்தப் பாடல் யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை தாண்டி சாதனை புரிந்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக சுந்தர் சியின் அரண்மனை 4 படத்திலும் நடித்து முடித்துள்ளார் தமன்னா. இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி இவற்றுடன் மராத்தியிலும் நடித்துள்ள தமன்னா, சினிமாவில் 18 ஆண்டுகளை கடந்து நடித்து வருகிறார். தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்துவந்த தமன்னா, தற்போது பாலிவுட்டில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து தன்னுடைய காதலை தமன்னா உறுதிப்படுத்தியிருந்தார்.

Actress Tamannaah celebrates her holidays in Maldives

பாலிவுட்டில் இவரது லஸ்ட் ஸ்டோரிஸ் 2 அதிகமான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, தனது காதலருடன் தமன்னா வெளிநாட்டிற்கு செல்லும் விமானநிலைய வீடியோ வெளியாகி ட்ரெண்டானது. அடுத்தடுத்த வெற்றிப்படங்களையும் தொடர்களையும் கொடுத்துவரும் இவர்கள் தற்போது மாலத்தீவிற்கு சுற்றுலா கொண்டாட்டத்திற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் மாலத்தீவில் இருந்தபடி தன்னுடைய புகைப்படங்களை தமன்னா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

மாலத்தீவில் கடற்கரையை சுற்றி தமன்னா இந்தப் புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்களில் ஒன்றில் பீச் மணலில் அவர் கோலமிடுவதாக அமைந்துள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடலில் ஆட்டம் போடுவதாகவும் சாப்பிடுவதாகவும் ஓய்வெடுப்பதாகவும் அடுத்தடுத்த புகைப்படங்களை தமன்னா இந்தப் பதிவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் 2 மணிநேரத்திலேயே 5 லட்சம் லைக்ஸ்களை அள்ளியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X