நாட்டையே உலுக்கிய விசாகப்பட்டினம் விஷவாயு.. பதறிப்போய் டிவீட் போட்ட நடிகை தமன்னா #VizagGasLeak

ஹைதராபாத்: விசாகப்பட்டினத்தில் உள்ள பிரபலமான எல்.ஜி பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8பேர் பலியாகி உள்ள சம்பவம் நாட்டையே அதிரவைத்துள்ளது.

Recommended Video

Gas Leakage in Andhra Pradesh , Reason Styrene Gas

சுமார் 3 கிலோ மீட்டர் வரை ரசாயன ஆலையில் இருந்து விஷ வாயு கசிந்ததில் 5000த்திற்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளனர். இதுவரை 8பேர் பலியாகி உள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Actress Tamannaah condolences and tweet about #VizagGasLeak

இன்று அதிகாலை 3 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எல்.ஜி பாலிமர் தொழிற்சாலைக்கு அருகே பல குடியிருப்புகள் இருந்ததால், விபத்தில் கசிந்த விஷ வாயு அருகில் இருந்த கிராமம் வரை பரவி பல ஆயிரக் கணக்கான மக்களின் சுவாசத்தை பாதித்து மூச்சுத் திணறல் ஏற்படுத்தியது.

இந்த விஷவாயு விபத்து எப்படி ஏற்பட்டது என்றும் ரசாயன ஆலையில் இருந்து எப்படி இவ்வளவு விஷவாயு பரவியது என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் விசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட விஷ வாயு சம்பவம் தீயாய் பரவி வருகிறது. டிவிட்டரில் #VizagGasLeak என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பலரும் இந்த சம்பவம் குறித்து பதறி போய் தங்கள் பதிவுகளை போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த செய்தி அறிந்த நடிகை தமன்னா தனது டிவிட்டர் பக்கத்தில், காலையில் எழுந்தவுடனே விசாகப்பட்டினம் விஷ வாயு சம்பவம் நெஞ்சை பதற வைத்து விட்டது.

விஷ வாயு கசிந்து ஏற்பட்ட விபத்தால் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டோர், உடல் நிலை குணமாகி மீண்டு வரவேண்டும் என நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/tamannaahspeaks/status/1258276272465014784

லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே உடற்பயிற்சி, யோகா உள்ளிட்டவற்றை செய்து வருகிறார் நடிகை தமன்னா.

சமீபத்தில் ஆடை ஏதும் அணியாமல் தலையணையை கட்டிக் கொண்டு பில்லோ சேலஞ்ச் செய்து வைரலாக்கியது குறிப்பிடத்தக்கது.

விஷ வாயு கசிவால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவலை அறிந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

https://twitter.com/Rakulpreet/status/1258271531484020736

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X