பழசை மறக்காத தமன்னா..‘தி லெஜண்ட்‘ நாயகன் அருள் சரவணனுக்காக செய்த விஷயம்!

சென்னை : சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் கதாநாயகனாக நடிக்கும் தி லெஜண்ட் திரைப்படம் வெற்றி பெற நடிகை தமன்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் அனைத்து வயதுடைய ஹீரோயின்களுடனும் ஆட்டம் போட்டு வந்த சரவணன் அருள், வெள்ளித்திரையில் காலடி எடுத்துவைத்து மிரட்ட உள்ளார். தி லெஜண்ட் ஜூலை 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

உல்லாசம், விசில் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தி லெஜ்ண்ட்.

தி லெஜண்ட்

தி லெஜண்ட்

லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் சரவணன் அருள் இந்த படத்தின் மூலம் திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுக்க உள்ளார். தி லெஜண்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தில் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு, நாசர், சச்சு, ரோபோ சங்கர், யோகிபாபு, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யாஷிகா ஆனந்த், ராய்லட்சுமி ஆகியோர் பாடலுக்கு மட்டும் நடனமாடி உள்ளனர்.

பிரம்மாண்ட இசைவிழா

பிரம்மாண்ட இசைவிழா

தி லெஜண்ட்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில், பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ராய் லட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், டிம்பிள் ஹயாதி, ஸ்ரீ லீலா, நுபுர் சனான், ஊர்வசி ரௌதாலா ஆகியோர் கலந்து கொண்டனர். இசை வெளியீட்டு விழாவே மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக இருந்தது.

ஹிட்டடித்த டிரைலர

ஹிட்டடித்த டிரைலர

அந்த விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய, சரவணன் அருள், சினிமாவில் என்னுடைய ரோல் மாடல் ரஜினி மற்றும் விஜய் தான் என்றார். மேலும் என்னை விமர்சனம் செய்கிறவர்களை வாழ்த்துவதாக கூறிமீம்ஸ் கிரியேட்டர்கள் மனதில் இடம் பிடித்தார். அது மட்டும் இல்லாமல் தி லெஜண்ட் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

ஆசை நிறைவேறி உள்ளது

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக உலகம் முழுவதும் ஜூலை 28ம் தேதி தி லெஜண்ட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் சரவண அருளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சரவணன் சாரும், நானும் சேர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் இணைந்து நடித்துள்ளோம். நடிகராக வேண்டும் என்ற அவரின் எண்ணம் இந்த படத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது. ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் ஹரிஸ்ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்த்த வாழ்த்துக்கள். தி லெஜண்ட் படத்தை ஜூலை 28ந் தேதி திரையரங்கில் பாருங்கள் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X