அய்யய்யோ.. ஆடையில்லாமல் தமன்னா.. முகத்துல கரியோட யாரோ கைய வச்சிருக்காங்களே.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: நடிகை தமன்னா ஆடையில்லாமல் முகத்தில் கரியை பூசியப்படி இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

Recommended Video

Tamannaah Bhatia boredom Video | Exercise, Cooking, Trend Setting • MPL Gaming App

நடிகை தமன்னா தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் அஜித், விஜய், சூர்யா, கார்த்மி, ஜெயம் ரவி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டுள்ளர்.

இதேபோல் தெலுங்கு, கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் நடிகை தமன்னா. இருப்பினும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்தான் தமன்னா அதிக படங்களில் நடித்திருக்கிறார்.

போட்டோக்கள்

போட்டோக்கள்

இந்திப் படங்களிலும் நடித்து வரும் தமன்னா, பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ளார் நடிகை தமன்னா. அடிக்கடி சமூக பிரச்சனைகள் தொடர்பாக குரல் கொடுத்துவரும் தமன்னா, தனது போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

எல்லாம் முடிந்த பிறகு

எல்லாம் முடிந்த பிறகு

அண்மையில் டீ ஷர்ட் மட்டும் அணிந்தப்படி, முகத்தில் பேஸ்பேக் அப்ளை செய்து பீம் பேக்கில் அமர்ந்து ஒய்யாரமாக போஸ் கொடுத்திருந்தார். அதோடு அந்த போட்டோவுக்கு எல்லாம் முடிந்தப் பிறகு என்னை எழுப்புங்கள் என்று கேப்ஷன் கொடுத்திருந்தார்.

கடும் கண்டனம்

கடும் கண்டனம்

அதனை பார்த்த நெட்டிசன்கள், எது முடிந்தப்பிறகு என்றும் இரட்டை அர்த்தத்தில் பேசுகிறீர்களா என்றும் கேட்டும் விளாசினர். இதனை தொடர்ந்து கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்டதை அறிந்து கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

முகத்தில் கரி

முகத்தில் கரி

இந்நிலையில் அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ஆடையில்லாமல் மார்பு வரை இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்ககத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் கரியுடன் முகத்தில் கையை வைத்துள்ளது போன்றும் கழுத்தில் கரியை பூசியிருப்பது போன்றும் உள்ளது.

முக்கியமல்லவா?

முக்கியமல்லவா?

இந்த போட்டோவுக்கு, உங்கள் மவுனம் உங்களை காப்பாற்றாது. மனிதனோ விலங்கோ ஒவ்வொரு உயிரும் முக்கியமல்லவா? எந்தவொரு படைப்பையும் முடக்குவது உலகளாவிய சட்டத்திற்கு எதிரானது. நாம் கற்றுக் கொள்ள வேண்டும், மீண்டும் மனிதனாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும், இரக்கத்தை வெளிப்படுத்த வேண்டும், அன்பைக் கடைப்பிடிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்..

எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்..

மேலும் #AllLivesMatter #WakeUpWorld என்ற ஹேஷ்டேக்குகளையும் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் போலீசாரால் கொடூரமாக கொல்லப்பட்டது, கேரளாவில் வயிற்றில் குட்டியுடன் இருந்த கர்ப்பிணி யானை கொல்லப்பட்டது ஆகிய விஷயங்களை குறிப்பிட்டும் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் தமன்னா தனது முகத்தில் கரியை பூசியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X