Actress Tamannaah: ரஜினியிடம் இதை எதிர்பார்க்கவில்லை. தமன்னா வெளிப்படை!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.

Actress Tamannaah hails Rajinikanth and working experience with him in Jailer movie

அனிருத் இசையமைப்பில் இந்தப் படத்தின் காவாலா பாடல் மிகப்பெரிய ஹிட் நம்பராக சர்வதேச அளவில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது.

ரஜினியின் எளிமை குறித்து பாராட்டு தெரிவித்த தமன்னா: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த சிறப்பான படங்களையும் சிறப்பான இயக்குநர்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஜாக்கி ஷெராப், சுனில், சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இவர்களது மாஸ் கூட்டணியில் படம் அதிரிபுதிரி வெற்றியை பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் மிகப்பெரிய விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ள ஜெயிலர் படத்தின் வசூலை சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 700 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த வெற்றியை நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருடன் தயாரிப்புத் தரப்பு கொண்டாடி மகிழ்ந்தது. சன் பிச்சர்சின் கலாநிதி மாறன் இவர்களுக்கு விலையுயர்ந்த காரை பரிசாக கொடுத்திருந்தார்.

இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றியை இசையமைப்பாளர் அனிருத் சாத்தியப்படுத்தியுள்ளதாக படத்தின் வெற்றிவிழாவின்போது நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார். இசை இல்லாமல் இந்தப் படத்தை பார்த்தபோது ஆவரேஜ் படமாகவே தனக்கு தோன்றியதாக அவர் கூறியது சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக படத்தின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் என அனைத்திலும் மிரட்டியிருந்தார் அனிருத். படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

குறிப்பாக படத்தின் காவாலா பாடல் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது. இந்தப் பாடலில் ரஜினிகாந்தும் ஆட்டம் போட்டிருந்தாலும் தமன்னாவின் முன்னால் அவரது ஆட்டம் எடுபடவில்லை. அந்த அளவிற்கு இந்தப் பாடலை தன்னுடைய ஆட்டத்தால் சிறப்பாக்கியிருந்தார் தமன்னா. இந்தப் படத்தில் நடிகையாவே நடித்திருந்த தமன்னா, படத்தின் பாடலுக்காக ஆட்டம் போடுவதாக இந்தப் பாடல் அமைந்திருந்தது. மிகச்சிறப்பான குத்தாட்ட பாடலாக காவாலா பாடல் அமைந்தது.

இந்தப் படத்தின்மூலம் முதல்முறையாக நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார் தமன்னா. ஜோடியாக இல்லையென்றாலும் ரஜினி மற்றும் தமன்னா காம்பினேஷன் காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்தன. இதனிடையே, இந்தப் படம் குறித்தும் ரஜினி குறித்தும் தமன்னா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பாராட்டு தெரிவித்துள்ளார். தான் பார்த்ததிலேயே மிகவும் எளிமையானவர் என்றால் அது ரஜினிகாந்த்தான் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த அளவிற்கு உயரத்தில் இருந்தும் தன்னுடைய எளிமையை மிகச்சிறப்பாக ரஜினிகாந்த் மெயின்டெயின் செய்து வருவதாக கூறியுள்ள தமன்னா, இது இரண்டும் ஒரே நபரிடம் இருப்பதை தான் பார்த்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார். ரஜினி இப்படி இருப்பார் என்று தான் முன்னதாக எதிர்பார்க்கவேயில்லை என்றும் கூறியுள்ளார். இந்தப் படத்தில் குறைவான காம்பினேஷன் காட்சிகள் இருந்த நிலையில், படப்பிடிப்பின்போது தமன்னாவிடம் தான் பேசவே சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என முன்னதாக ரஜினி படத்தின் வெற்றிவிழாவில் பேசியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X