மலையாள சர்ச்சை நாயகனுடன் ஜோடி சேர்ந்த தமன்னா: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

கொல்லம்: தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார்.

இந்தியில் தமன்னா நடித்துள்ள 'பப்ளி பவுன்சர்' திரைப்படம் வரும் 23ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

இந்நிலையில், தமன்னா முதன்முறையாக மலையாளத்தில் அறிமுகமாகும் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் கனவு கன்னி தமன்னா

ரசிகர்களின் கனவு கன்னி தமன்னா

இந்தியில் நடிகையாக அறிமுகமான தமன்னா அப்படியே தமிழ், தெலுங்குத் திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார். தமிழில் கேடி திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த தமன்னா, குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், தனுஷ், சூர்யா, கார்த்தி, விஷால் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து அசத்தினார் தனது வசீகரிக்கும். மெல்லிடையால் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் தமன்னா, தற்போது முதன்முறையாக மலையாளத்திலும் அறிமுகமாகிறார்.

முதன்முறையாக மலையாள சினிமாவில்

முதன்முறையாக மலையாள சினிமாவில்

கடந்த சில நாட்களாகவே தமன்னா மலையாள படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது. மலையாளத்தில் முன்னணி நடிகராகன திலீப் ஹீரோவாக நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. இதுவே மலையாளத்தில் தமன்னா நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அருண் கோபி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு கன்ஃபார்ம் ஆகவில்லை. இந்நிலையில், இந்தப் படத்தின் பூஜை கொல்லத்தில் உள்ள கொட்டாரக்கரை ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் நடைபெற்றுள்ளது.

சர்ச்சை நாயகனுடன் ஜோடி

சர்ச்சை நாயகனுடன் ஜோடி

இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 10-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கி, மொத்தம் 130 நாட்களில் நிறைவுபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே மலையாள நடிகர் திலீப் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி கடும் சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தார். பிரபல நடிகை கொடுத்த புகாரின் பேரில் திலீப் விமர்சனத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இது எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர், காவல்துறை உயர் அதிகாரி ஒருவரின் சதியால் அரங்கேறியதாக திலீப்பும் தெரிவித்திருந்தார். சில நாட்கள் முன்னர், சினிமாவில் நடிகைகளுக்கு மதிப்பே இல்லையென பேசியிருந்த தமன்னா, தற்போது சர்ச்சையில் சிக்கிய திலீப்புடன் ஜோடி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமன்னாவின் பப்ளி பவுன்சர் ரிலீஸ்

தமன்னாவின் பப்ளி பவுன்சர் ரிலீஸ்

முதன்முறையாக மலையாள திரைப்படத்தில் நடிக்கவுள்ளதால் தமன்னா செம்ம ஹேப்பி மூடில் இருக்கிறார். மேலும், ரஜினியின் ஜெயிலர் படத்திலும் தமன்னா நடிக்கலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இதனிடையே அவர் இந்தியில் நடித்துள்ள 'பப்ளி பவுன்சர்' திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது. வரும் 233ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் 'பப்ளி பவுன்சர்' திரைப்படத்தை காண, தமன்னா ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X