'என்னோட ஃபேவரிட் ஹீரோவை மீட் பண்ணிட்டேன்...' - துள்ளிக் குதிக்கும் தமன்னா!
மும்பை : தமிழின் முன்னனி நடிகையாக இருக்கும் தமன்னா, இந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷனை சந்தித்தது பற்றி மிக்க மகிழ்ச்சி என இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு பகிர்ந்துள்ளார்.
சினிமாவில் ஹீரோக்களுக்கும், ஹீரோயின்களுக்கும் எண்ணற்ற ரசிகர்கள் இருப்பதைப் போலவே சில ஹீரோக்களுக்கு சில ஹீரோயின்களும், சில ஹீரோயின்களுக்கு சில ஹீரோக்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள ஹீரோக்களில் அஜித், விஜய்யைப் பிடிக்கும் என்று சொல்லும் ஹீரோயின்கள் தான் அதிகம் இருப்பார்கள். அவர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஆசை என்றும் சொல்வார்கள்.
தமிழில் முன்னனி நடிகையாக இருக்கும் தமன்னா தற்போது, விக்ரம் ஜோடியாக 'ஸ்கெட்ச்' படத்தில் நடித்து வருகிறார். இந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷனை சந்தித்தது பற்றி மிக்க மகிழ்ச்சி எனப் பகிர்ந்துள்ளார் தமன்னா.
'ஹிரித்திக்குடன் ஒரு அற்புதமான சந்திப்பு. உங்களை எனது தொடக்ககாலம் முதல் கவனித்து வருகிறேன். நீங்கள் எனக்கு எப்போதும் ஊக்கமளித்து வருகிறீர்கள். எனது ஃபேவரிட் ஹீரோவை எப்போதாவது சந்திப்பேன் என ரகசியமாக நம்பினேன். இன்றுதான் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.
இந்தத் தருணத்தையும், புகைப்படத்தையும் எப்போதும் கொண்டாடுவேன். மிக்க மகிழ்ச்சி' எனக் கூறியுள்ளார் தமன்னா. அதற்கு ஹிரித்திக்கும் 'உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி' எனப் பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











