Tamannaah: துறவியாக அதிரடி கிளப்பிய தமன்னா.. மகா கும்பமேளாவில் செய்த சம்பவம்!
சென்னை: நடிகை தமன்னா அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் அதிரடி கிளப்பி வருகிறார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துவரும் தமன்னா தொடர்ந்து 20 ஆண்டுகளை கடந்து சினிமாவில் நிலையாக இருந்து வருகிறார்.
தமிழில் ஜெயிலர் படம், அரண்மனை 4 படங்களில் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த தமன்னா மீண்டும் ஜெயிலர் 2 படத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே பாலிவுட்டிலும் தமன்னா நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

நடிகை தமன்னா: நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிப் படங்களில் பறந்து பறந்து நடித்து வருகிறார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள தமன்னா, நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து தமன்னா ஆட்டம் போட்டிருந்த காவாலா பாடல் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட் லிஸ்ட்டில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது. இந்தப் படத்தை தொடர்ந்து சுந்தர் சி இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான அரண்மனை 4 படத்திலும் தமன்னா கேரக்டர் அதிகமான வரவேற்பை பெற்றது.
கலக்கல் ஆட்டம்: இதனிடையே பாலிவுட்டிலும் ஸ்ட்ரீ 2 படத்தில் ஆஜ் கி ராட் என்ற பாடலில் ஆட்டம் போட்டிருந்தார் தமன்னா. இந்தப் பாடல் யூடியூபில் 780 மில்லியனை தாண்டி வியூஸ்களை பெற்றிருந்தது. இதனிடையே தமன்னா பாலிவுட்டில் லீட் கேரக்டரில் நடித்திருந்த சிக்கந்தர் கா முகாதூர் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது. இதனிடையே அசோக் தேஜா இயக்கத்தில் தமன்னா நடித்துள்ள ஒடேலா 2 படமும் அடுத்ததாக அவரது நடிப்பில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் சிவசக்தியாக தமன்னா நடித்துள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது.
மகா கும்பமேளாவில் ஒடேலா 2 டீசர்: கடந்த 2022ம் ஆண்டில் ஒடேலா ரயில் நிலையம் படம் வெளியாகி மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனிடையே இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம் வொர்க்ஸ் நிறவனங்கள் இணைந்து இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளன. இதனிடையே படத்தின் டீசர் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. மகா கும்பமேளாவில் இந்த டீசரை படக்குழுவினருடன் இணைந்து தமன்னா வெளியிட்டுள்ளார். அதிகமான திகில் காட்சிகளுடன் இந்த டீசர் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
துறவியாக தமன்னா: படத்தில் துறவியாக தமன்னா நடித்துள்ள நிலையில் அவருடன் ஹெபா படேல், யுவா, நாக மகேஷ், வம்சி உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இந்த டீசர் வெளியீட்டின்போது மகா கும்பமேளாவில் தன்னுடைய குடும்பத்தினருடனும் பங்கேற்ற தமன்னா, திரிவேணி சங்கமத்தில் நீராடியதுடன் சிறப்பு வழிபாடுகளிலும் தன்னுடைய குடும்பத்தினருடன் ஈடுபட்டார். பாலிவுட்டில் நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வருவதாகவும் இந்த ஆண்டிலேயே அவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











