என்னை கல்யணம் செஞ்சுக்க சொல்லி பேரண்ட்ஸ் தொல்லை செய்றாங்க.. தமன்னா பேச்சு!

மும்பை : நடிகை தமன்னா தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.

தமன்னா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் பிசியாக நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக நடித்துவரும் தமன்னா தற்போது தன்னுடைய திருமணம் குறித்தும் பேசியுள்ளார்.

நடிகை தமன்னா

நடிகை தமன்னா

நடிகை தமன்னா தென்னிந்திய மொழிகளில் சிறப்பான நடிகையாக உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட் படங்களிலும் சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து பல ஆண்டுகளாக நடித்து வரும் இவர், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

முன்னணி ஹீரோக்களுடன் தமன்னா

முன்னணி ஹீரோக்களுடன் தமன்னா

தமிழில் கார்த்தி, விஜய் சேதுபதி, விஜய், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள தமன்னாவிற்கு தற்போது தமிழில் வாய்ப்புகள் இல்லை என்ற நிலையில், தெலுங்கு, இந்தி மொழிகளில் இவர் நடித்து வருகிறார். மொத்தமாக 70க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

ஏற்றம் தந்த பாகுபலி படங்கள்

ஏற்றம் தந்த பாகுபலி படங்கள்

கதைக்கு தேவை என்றாலும் இல்லாவிட்டாலும் தூக்கலான கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வரும் தமன்னா, பாகுபலி படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்தப் படத்தில் இவருக்கு நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் இருந்தது. அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் தமன்னா.

பாலிவுட்டில் பிசியான தமன்னா

பாலிவுட்டில் பிசியான தமன்னா

தொடர்ந்து பாலிவுட்டில் 4 படங்களிலும் தெலுங்கில் 2 படங்களிலும் நடித்துவரும் தமன்னாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான நவம்பர் ஸ்டோரீஸ் வெப் தொடருக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு காணப்பட்டது. தமிழிலும் தனக்கான வாய்ப்பை மீண்டும் பெற தமன்னா முயற்சித்து வருகிறார்.

திருமணம் செய்ய வற்புறுத்தல்

திருமணம் செய்ய வற்புறுத்தல்

தற்போது பாலிவுட்டில் தமன்னா நடித்துவரும் பிளான் ஏ பிளான் பி படத்தின் ஒரு பாடலில் மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார் தமன்னா. இதனிடையே மற்ற குடும்பங்களை போலவே தன்னுடைய குடும்பத்தினரும் தன்னை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆக வற்புறுத்தி வருவதாக தமன்னா தெரிவித்துள்ளார்.

திருமண வாழ்க்கைக்கு நேரமில்லை

திருமண வாழ்க்கைக்கு நேரமில்லை

ஆனால் தான் தற்போது மிகவும் பிசியாக படங்களில் நடித்து வருவதாகவும் ஒரு நாளில் 24 மணிநேரம் தான் படங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் அதனால் திருமண வாழ்க்கை குறித்து யோசிக்கக்கூட தனக்கு நேரமில்லை என்றும் தமன்னா கூறியுள்ளார். தனக்கு நடிப்பதில் உள்ள ஆர்வத்தை தன்னுடைய பெற்றோர் உணர்ந்துள்ளதாகவும் தமன்னா கூறியுள்ளார்.

விரைவில் திருமணம் செய்வேன்

விரைவில் திருமணம் செய்வேன்

ஆனால் இப்படி சொல்வதால் தனக்கு திருமணம் செய்துக் கொள்வதில் விருப்பம் இல்லை என்று அர்த்தமில்லை. என்றும் விரைவில் திருமணம் செய்துக் கொண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்புவதாகவும் தமன்னா கூறியுள்ளார். தற்போது தனக்கு பிடித்தமான நடிப்பை அதிகமான நேசிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X