அதெல்லாம் ஒரு படமா.. சுறா படத்துல நடிச்சது பெரிய தப்பு.. மனம் திறந்த தமன்னா!

சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகைகள் பட்டியலில் இருக்கும் நடிகை தமன்னா, சுறா படப்பிடிப்பின்போதே எனக்குத் தெரியும், அது வொர்க்அவுட் ஆகாது என்று. இனிமே இப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவே மாட்டேன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை தமன்னா, கேடி, கல்லூரி, போன்ற படங்கள் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறினார். இவர், 2010 முதல் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். முதன் முதலில் பாலிவுட் மூலம் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்தாலும் இவருக்கு தமிழ் சினிமாதான் தகுந்த வாய்ப்புகளை அளித்தது. விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள் மட்டுமின்றி, தெலுங்கிலும் தமன்னாவின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. இதனால் தமிழ், தெலுங்கு என இருபக்கமும் பிஸியாக நடித்த தமன்னா, இப்போது பான் இந்தியா ஹீரோயினாக கலக்கி வருகிறார்.

actress tamannaah says not impressed with her performance in Sura

அதேசமயம் தமன்னா, தற்போது இந்தி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார். இந்த படத்தில் காவாலா பாடலுக்கு நடனமாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்பக்கம் திருப்பி விட்டார். இதனால்,எந்த பக்கம் சென்றாலும் காவாலா வைப் ஆகத்தான் இருக்கிறது.

ஒரு கோடி சம்பளம்: அண்மையில் இலங்கையில் நடந்த இசை நிகழ்ச்சியில் தமன்னாவின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் முண்டி அடித்துக்கொண்டு சென்றால், அந்த பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பல பெண்கள் மயங்கி விழுந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் நடனமாட மட்டும் தமன்னாவிற்கு ஒரு கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அது ஒரு படமா: இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், சுறா திரைப்படம் எனக்கு பிடிக்கும். ஆனால் அதில் என்னுடைய நடிப்பு மிகவும் மோசமாக இருக்கும். இனிமேல் இப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நான் நடிக்கவே மாட்டேன் என்பதை உறுதியாக இந்த பேட்டியில் கூறிக்கொள்கிறேன்.சுறா படப்பிடிப்பின்போதே எனக்குத் தெரியும், அது வொர்க்அவுட் ஆகாது என்று தெரிந்துவிட்டது. சில படங்களில் நடிக்கும் போதே தெரிந்து விடும் அப்படித்தான் இந்த படத்தில் நடிக்கும் போதே எனக்கு தெரிந்துவிட்டது. ஆனால், வேறு வழியில்லாமல் அந்த படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியதாகிவிட்டது. வெற்றி, தோல்வி என்று எல்லாவற்றையும் அணுக முடியாது. நாங்கள் ஒப்புகொண்டிருக்கும் ஒரு விஷயத்தில் பலரின் பொருளாதாரம் உள்ளிட்டவை சம்பந்தபட்டிருக்கிறது. ஆகவே, கமிட்டாகிவிட்டால் அதில் நடித்தே ஆகவேண்டும். அது வேலையின் ஒரு பகுதி என்றார்.

மோசமான படம்: சுறா திரைப்படம் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியானது. இதில், விஜய், வடிவேலு, தமன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விஜய்யின் 50ஆவது படமாக உருவான அந்தப் படம் விஜய்யுடைய சினிமா பயணத்தில் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்த திரைப்படமாகும். இதனால்,இந்த படத்தை ரசிகர்கள் படுமோசமாக ட்ரோல் செய்தனர்.

More from Filmibeat

Read more about: actress tamannaah sura
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X