'அந்தக்' காட்சிதான் எனக்கு சவாலாக இருந்தது.. பாகுபலி படம் குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா!

சென்னை: பாகுபலி படத்தில் தனக்கு சவாலாக இருந்த காட்சி குறித்து நடிகை தமன்னா மனம் திறந்து பேசியுள்ளார்.

5 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் பாகுபலி தி பிகினிங் படம் ரிலீஸ் ஆனது. எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றது இப்படம் க்ளைமேக்ஸில் கட்டப்பாவால் பாகுபலி கொல்லப்பட்டதால், பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன் என்ற கேள்வி இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்கள் மத்தியிலும் எழுந்தது.

ஐந்து ஆண்டுகள்

ஐந்து ஆண்டுகள்

இதனால் பாகுபலி இரண்டாம் பாகம் எப்போது ரிலீஸ் ஆகும் என காத்திருந்தனர் ரசிகர்கள். இன்றோடு பாகுபலி படம் வெளியாகி 5 ஆம் ஆண்டுகள் ஆகிறது. எத்தனை முறை பார்த்தாலும் கொஞ்சமும் சளைக்காமல் உள்ளது அப்படம்.

மனம் திறந்த தமன்னா

மனம் திறந்த தமன்னா

பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா டக்குபதி, அணுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ், தமன்னா, ரோகினி என பலர் நடித்திருந்தனர். அனைவரின் நடிப்பும் பெரும் பாராட்டை பெற்றது. இந்நிலையில் பாகுபலி படம் குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார் நடிகை தமன்னா.

பாகுபலிக்கு பிறகு

பாகுபலிக்கு பிறகு

பாகுபலி படத்தில் அவந்திகா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் தமன்னா. இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பாகுபலி படத்தில் நடித்த பிறகு, எந்த கதாப்பாத்திரத்தையும் தன்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்ததாக கூறியுள்ளார்.

சவாலாக இருந்தது

சவாலாக இருந்தது

படத்தில் நடிக்கும் போது இப்படி ஒரு வெற்றியை பெரும் என்று யாருக்கும் எந்த க்ளுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் பாகுபலி படத்தில் தனக்கு சவாலாக இருந்த காட்சி, தன்னுடைய அறிமுக காட்சிதான் என்று கூறியிருக்கிறார் தமன்னா.

இதற்கு முன் செய்ததில்லை

இதற்கு முன் செய்ததில்லை

மலையில் நடைபெறும் சண்டையில் சேறும் சகதியுமான காட்டில்தான் அவந்திகா அழுக்காக அறிமுகமாவார். நான் இதற்கு முன் ஒருபோதும் ஒரு முழுமையான சண்டை செய்ததில்லை, இதற்கு முன் அந்த மாதிரியான கேரக்டரில் நடித்ததே இல்லை. எனவே அந்த நேரத்தில் என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை.

மூன்று நபர்கள்

மூன்று நபர்கள்

ராஜமவுலி சார் பீட்டர் ஹெய்ன் சார் மற்றும் பிரபாஸ் ஆகியோரால் மட்டுமே நான் இதனை முழுமையாக செய்ய முடிந்தது என்று நினைக்கிறேன். அந்தக் காட்சியை எனக்கு எளிதாக்கிய மூன்று நபர்கள் அவர்கள் தான் என தெரிவித்துள்ளார் தமன்னா.

அறிமுக பாடல்

அறிமுக பாடல்

நடிகை தமன்னா பாகுபலி படத்தில் தங்கள் ராணி தேவசேனாவை காப்பாற்ற வேண்டும் என்று போராடும் படைப் பெண்ணாக நடித்திருப்பார். தமன்னாவின் அறிமுக பாடல் நல்ல வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X