Japan music launch: கார்த்தி தமிழ் சொல்லிக் கொடுத்தார்.. தமன்னா க்யூட் ஸ்பீச்!

சென்னை: நடிகர் கார்த்தி, அனு இமானுவேல் உள்ளிட்டவர்கள் நடிப்பில் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜப்பான்.

இந்தப் படம் வரும் தீபாவளியையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டிய ப்ரமோஷன்களில் படக்குழுவினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் நிகழ்ச்சியில் படக்குழுவினர் மட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ், தமன்னா உள்ளிட்டவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

Actress Tamannaah shares her memories with Karthi in Paiyaa movie

நடிகர் கார்த்தி: கார்த்தி, அனு இமானுவேல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ஜப்பான். ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜப்பான் படம் தீபாவளியையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் மட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ், ஹெச் வினோத், சுசீந்திரன், தமன்னா, சத்யராஜ், சிபிராஜ் உள்ளிட்டவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

கார்த்தியின் 25வது படம்: கார்த்தியின் 25வது படமாக உருவாகியுள்ள இந்தப் படம் குறித்தும் கார்த்தி குறித்தும் பிரபலங்கள் பலரும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் பேசிய நடிகை தமன்னா, தான் இதுவரை 75 படங்களில் நடித்து முடித்துள்ளதாகவும் ஆனாலும் மக்கள் எப்போதும் கார்த்தியுடன் தான் நடித்த பையா படம் குறித்தே அதிகமாக பேசுவதாகவும் பாராட்டுவதாகவும் தெரிவித்தார். பையா படத்தின் சூட்டிங்கின்போது நடிகர் கார்த்தி தனக்கு தமிழ் பேச கற்றுக் கொடுத்ததாகவும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.

தமன்னா பேச்சு: பையா படத்தை தன்னுடைய முக்கியமான மற்றும் மறக்க முடியாத படமாக மாற்றிய கார்த்திக்கும் தமன்னா நன்றி தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், நடிகர் கார்த்தியின் வளர்ச்சியை தான் தொடர்ந்து பார்த்து வருவதாகவும் அவர் தன்னுடைய ரசிகர்களை மிகவும் நேசிப்பதாகவும் தன்னுடைய ரசிகர்களை தொடர்ந்து என்டர்டெயின் செய்வதை அவர் விரும்புவதாகவும் தமன்னா மேலும் பேசினார்.

20 ஆண்டுகால பயணம்: இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, மணிரத்னம் படத்தில் துணை இயக்குநராக தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கிய நிலையில் தற்போது 20 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளதாகவும் இதுவரை 25 படங்களில் நடித்து முடித்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த 20 ஆண்டுகளில் தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கும் தன்னுடன் பயணித்த இயக்குநர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். மிகவும் சந்தோஷமான தருணம் இது என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Actress Tamannaah shares her memories with Karthi in Paiyaa movie

கார்த்தி உற்சாகம்: மேலும் தான் சறுக்கிய படங்களின்போது ரசிகர்களின் விமர்சனம் மூலம் தான் அதிகமாக கற்றுக் கொண்டு முன்னேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து எப்போதும்போல தனக்கு ஆதரவு தெரிவிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார். ஜப்பான் படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகியுள்ள நிலையில், படத்தில் வித்தியாசமான கார்த்தியை பார்க்க முடிகிறது. இந்தப் படம் 25வது படமாக அமைந்துள்ள நிலையில், அடுத்தடுத்த படங்களில் அவர் கமிட்டாகியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X