பர்ஸ்ட் நயன்... நெக்ஸ்ட் அஞ்சலி... இப்ப தமன்னா... யோகி பாபு காட்டுல அடைமழை தான்!

தமன்னா நடிக்கும் பெட்ரோமாக்ஸ் படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சென்னை: தமன்னா நடிக்கும் ஹாரர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யோகி பாபு.

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என எல்லா வுட்டிலும் டாப் ஹீரோயினாக கலக்கியவர் தமன்னா. தற்போது அவருக்கு அனைத்து மொழி மார்க்கெட்டும் டவுன் தான். தமிழில் மட்டுமே ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் தமன்னா.

Actress Tamannaah teams up with Yogi Babu in Petromax

அவர் தற்போது புதிதாக நடிக்கும் படம் பெட்ரோமாக்ஸ். ஹாரர் காமெடி படமான இதனை ரோஹின் இயக்குகிறார்.

இந்த படத்தின் முக்கிய ஹைலைட் என்னவென்றால், தமன்னாவுக்கு இணையான முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். அவருடன் காளிவெங்கட், முனிஸ்காந்த் ராமதாஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார் யோகி பாபு. அதைத்தொடர்ந்து, ஐரா படத்திலும் அவருடன் முக்கிய ரோலில் நடித்தார். அஞ்சலியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமன்னாவுடனும் யோகி பாபு சேர்ந்து நடிப்பது, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

தர்மபிரபு, கூர்கா என இரண்டு படங்களில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துவிட்டார். இந்த இரண்டு படங்களும் நன்றாகவே வசூல் செய்திருக்கின்றன. எனவே யோகி பாபு மீது பந்தயம் கட்ட தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆக தமிழ் சினிமாவில் தற்போது யோகி பாபு காட்டில் தான் அடைமழை பெய்து கொண்டிருக்கிறது என கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X