Tamannaah: இதை மட்டும் கிளியர் பண்ணுங்க.. விஜய்கிட்ட கேக்கறதுக்கும் தமன்னாவுக்கு கேள்வி இருக்காம்!

சென்னை: நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் அக்டோபர் 19ம் தேதி இந்தப் படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் இணையவுள்ளார் விஜய்.

வரும் டிசம்பரில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

Actress Tamannaah wants to ask Vijay About she is in Thalapahy 68 or not

தளபதி 68 குறித்து விஜய்யிடம் கேட்கவிரும்பும் தமன்னா: நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைந்துள்ளார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் கொடுத்து வருகின்றனர். கடந்த மாதத்தில் விஜய் பிறந்தநாளையொட்டி போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.

இந்நிலையில் சஞ்சய் தத் பிறந்தநாளையொட்டியும் அவரது வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தில் ஆண்டனி தாஸ் என்ற கேரக்டரில் அவர் நடித்துள்ளது குறித்து இந்த மிரட்டலான வீடியோவில் காட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து இந்த வீடியோவில் கழுகு காட்டப்பட்டிருந்தது. முன்னதாக கமலுக்கும் கழுகு காட்டப்பட்டிருந்த நிலையில், இந்த இரு கேரக்டர்களும் எல்சியூவில் இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது லியோ படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு, சுற்றுலா கொண்டாட்டத்திற்காக வெளிநாடு பறந்துள்ளார் விஜய். இந்த விடுமுறைக் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு நாடு திரும்பும் அவர், தளபதி 68 படத்தின் சூட்டிங்கில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 68 படத்தின் அறிவிப்பு மிரட்டலாக இருக்கும் என்றும் காத்திருங்கள் என்றும் நேற்றைய தினம் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தப் படத்தில் மற்ற நடிகர், நடிகைகள் குறித்து அறிந்துக் கொள்ள, குறிப்பாக நாயகி குறித்த அப்டேட்டை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்னதாக இந்தப் படத்தில் நடிகை தமன்னா விஜய்க்கு ஜோடியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. முன்னதாக இந்த ஜோடி சுறா படத்தில் இணைந்து நடித்திருந்தது. இந்நிலையில் தான் நடித்த படங்களிலேயே மிகவும் மோசமான படம் சுறாதான் என்று தமன்னா தன்னுடைய பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜெயிலர் படத்திற்காக யூடியூப் சேனல் ஒன்றிற்கு அவர் கொடுத்திருந்த பேட்டியில், விஜய்யிடம் தமன்னா கேட்கவிரும்பும் கேள்வி குறித்து கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு பதிலளித்த தமன்னா, தான் விஜய்யின் தளபதி 68 படத்தில் இருக்கிறேனா இல்லையா என்று கேட்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது தமன்னா, ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. அடுத்ததாக அரண்மனை 4 படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X