Tamannaah: சூர்யாவிடம் தமன்னா கேட்க விரும்பும் கேள்வி.. பதில் சொல்வாரா கங்குவா நாயகன்!
சென்னை: நடிகர் ரஜினியுடன் கைக்கோர்த்து தமன்னா நடித்துள்ள படம் ஜெயிலர். வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.
சமீபத்தில் ரஜினியுடன் தமன்னா ஆட்டம் போட்டிருந்த காவாலா பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சமீபத்தில் நடைபெற்ற ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலக்கலான சிவப்பு நிற உடையில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார் தமன்னா.

கங்குவா நாயகன் சூர்யாவிடம் தமன்னா கேட்க விரும்பும் கேள்வி: நடிகை தமன்னா இந்திய அளவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கேடி படத்தின்மூலம் அறிமுகமான தமன்னா, தொடர்ந்து விஜய், சூர்யா, கார்த்தி, விஷால் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தொடர்ந்து பல ஆண்டுகளை கடந்து தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அடுத்ததாக ரஜினியுடன் இணைந்து தமன்னா நடித்துள்ள ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது.
முன்னதாக ரஜினியுடன் தமன்னா இணைந்து நடித்திருந்த காவாலா என்ற பாடல் பர்ஸ்ட் சிங்கிளாக லிரிக் வீடியோவாக வெளியானது. அனிருத் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. குறிப்பாக காவாலா பாடல் மற்றும் அதில் தமன்னாவின் ஆட்டம் ரசிகர்களை மட்டுமில்லாமல் பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்து அதிகமான ரீல்ஸ்கள் இந்தப் பாடலுக்காக போடப்பட்டுள்ளன.
இதனிடையே, ஜெயிலர் படத்தின் பிரமோஷனையொட்டி தமன்னா பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் விஜய்யுடன் தான் நடித்திருந்த சுறா படம் குறித்தும் அவர் பேசியுள்ளார். அந்தப் படம் தான் நடித்ததிலேயே மிகவும் மோசமான படம் என்றும், தன்னுடைய கேரக்டர் பல இடங்களில் கேவலமாக இருந்ததாகவும், இனிமேல் இதுபோன்ற படங்களில் தான் நடிக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் நடிகர் சூர்யா குறித்த கேள்விக்கு பதிலளித்த தமன்னா, சூர்யாவை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் தற்போது நடித்துவரும் கங்குவா படத்தின் ப்ரமோ சிறப்பாக அமைந்திருந்ததாகவும் குறிப்பிட்டார். இந்தப் படத்தில் நடித்துள்ள திஷா பட்டானியை தான் சமீபத்தில் சந்தித்து, படம் குறித்து பேசியதாகவும் தெரிவித்துளள தமன்னா, சூர்யாவிடம் தான் படம் குறித்தும் படத்தின் அப்டேட் குறித்தும் கேட்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தமன்னா அரண்மனை 4 படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தின் நாயகனாக சுந்தர் சி நடித்துள்ள நிலையில், கதையில் ராஷி கண்ணாவும் மற்றொரு நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப்பிற்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியென்றால், தமன்னாவிற்கு பேய் பிடிப்பதாகவும் அதை சுந்தர் சி கண்டுபிடிப்பதாகவும் கதைக்களம் அமையும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











