twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உயிரை விட வேற என்ன முக்கியம்? படிக்காத கிராம மக்களே வேலி போட்டு வச்சுருக்காங்க.. பிரபல நடிகை பொளேர்!

    |

    சென்னை: உயிரை விட வேறு எதுவும் முக்கியமில்லை என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    கொரோனா - TV SERIAL அவ்ளோதானா ! | TALKING 2 MUCH EP-3 | FILMIBEAT TAMIL

    கொரோனா அச்சுறுத்தலால் உலக நாடுகள் பலவும் முடங்கி போயுள்ளன. உலகம் முழுக்க இதுவரை ஐந்தரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Actress Tamannah requesting people to stay in home to prevent from Corona virus

    இந்தியாவிலும் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள கொரோனாவை தடுக்க மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

    வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஆனால் சிலர் அதனை பொருட்படுத்தாமல் வெளியே சுற்றி வருகின்றனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் நடிகை தமன்னாவும் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், பிரதமர் மோடி அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு என்பது, வரும் அழிவில் இருந்து முன்கூட்டியே நம்மை பாதுகாத்து கொள்ளும் முயற்சியாகும். இதை அலட்சியமாக நினைக்க வேண்டாம். நம்மை காப்பாற்றுவதற்காகத்தான் இந்த முடிவு.

    கண்ணீருடன் நண்பனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்.. பெசன்ட்நகரில் தகனம் செய்யப்பட்டது சேதுவின் உடல்!கண்ணீருடன் நண்பனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்.. பெசன்ட்நகரில் தகனம் செய்யப்பட்டது சேதுவின் உடல்!

    நாம் உயிரோடு இருப்பதைவிட எதுவும் முக்கியம் இல்லை. நான் குடும்பத்தோடு வீட்டில் இருக்கிறேன். நீங்களும் வீட்டிலிருக்க ஆசைப்படுகிறேன். நல்ல நிலையில் இருப்பவர்கள் வீட்டில் இருப்பது வேறு. ஆனால் சாதாரண ஏழைகள், படிப்பறிவில்லாத கிராமத்தினர் வீடுகளுக்கு வேலிபோட்டு அவர்கள் வெளியே வராமல், மற்றவர்களையும் ஊருக்குள் வரவிடாமல் தடுத்து வைத்துள்ளார்கள். அவர்களை பார்த்து படித்தவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

    English summary
    Actress Tamannah requesting people to stay in home to prevent from Corona virus.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X