76 வயசுல பிகினியில் செம ஆட்டம் போட்ட பழம் பெரும் நடிகை.. மகளின் பிறந்த நாள் விழாவில் அட்டகாசம்!

சென்னை: பழம் பெரும் பாலிவுட் நடிகையான தனுஜா பிகினியில் மகள்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பழம் பெரும் நடிகையாக கருதப்படுபவர் நடிகை தனுஜா. 1952 ஆம் ஆண்டு முதல் 199ஆம் ஆண்டு வரை பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இவரது பெற்றோரும் திரைத்துறையை சேர்ந்தவர்கள்தான். தனுஜாவின் தாய் ஷோபனா சமர்த்தும் ஒரு நடிகைதான்.

மகள்கள்

தனுஜாவின் தந்தை குமார்சென் சமர்த்து திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். ஏராளமான படங்களில் நடித்துள்ள தனுஜா, இயக்குநர் ஷோமு முகர்ஜியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுடைய மகள்கள்தான் பிரபல பாலிவுட் நடிகைகள் கஜோல் மற்றும் தனிஷா. இதில் கஜோல் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டார்.

உன்னாலே உன்னாலே

நடிகை கஜோல் மின்சார கனவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். கடைசியாக விஐபி 2 படத்தில் தனுஷ்க்கு வில்லியாக நடித்திருந்தார். நடிகை கஜோலின் தங்கையான தனிஷா, வினய் - சதா நடிப்பில் வெளியான உன்னாலே உன்னாலே படத்தில் இரண்டாவது ஹீரோயினாக அறிமுகமானார்.

பிகினி போட்டோ

பிகினி போட்டோ

பழம் பெரும் நடிகையான தனுஜாவின் கணவர் ஷோமு சமர்த் கடந்த 2008ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார். இந்நிலையில் நடிகை தனுஜா பிகினியில் இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனுஜா பிகினியில் இருக்கும் போட்டோவை அவரது மகள் தனிஷா தனது இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிகினியில் ஆட்டம்

பிகினியில் ஆட்டம்

தனிஷா முகர்ஜி கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது தனது குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் பார்ட்டி கொடுத்தார். அப்போது தோழிகள் உட்பட அனைவரும் பிகினியில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட 76 வயதான நடிகை தனுஜாவும் பிகினியில் செம ஆட்டம் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X