ப்ளீஸ் வாங்க.. உங்களை அழிக்க நினைச்சவங்களுக்கு பதிலடி கொடுங்க.. ஹீரோயினை ஆசையாக அழைக்கும் ரசிகர்கள்
சென்னை: உங்களை சினிமாவில் இருந்து ஒழிக்க நினைத்தவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக, நீங்கள் நடிக்க வரவேண்டும் என்று ஹீரோயினுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சில ஹீரோயின்கள் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்களிடம் அவர்களுக்கு வரவேற்பு இருக்கும். அவர்கள் நடிப்பு பேசப்பட்டுக் கொண்டிருக்கும்.
நடிகை தனுஶ்ரீ தத்தாவும் அப்படித்தான் போலிருக்கிறது. இவர் தமிழில் விஷால் ஜோடியாக தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருந்தார்.

ஆன்மிகத்துக்கு
இந்தியில் சில படங்களில் நடித்திருந்த தனுஶ்ரீ, 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடிக்கவில்லை. வெறுப்பில் சினிமாவை விட்டு ஆன்மீகம் பக்கம் சென்றார். தலையை மொட்டை அடித்து ஆளே மாறி இருந்தார். சிறிது காலம் அமைதியாக இருந்த அவர், கடந்த சில வருடங்களுக்கு முன், மீ டு புகார் மூலம் வெளிச்சத்துக்கு வந்தார்.

நடிகர் நானா படேகர்
இவர், ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற இந்தி படத்தில் நடித்தபோது, நடிகர் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் இதுகுறித்து வெளியே சொன்னதால் அவர் ஆதரவாளர்கள் மிரட்டினார்கள் என்றும் குடும்பத்தோடு சென்றபோது தாக்கப்பட்டேன் என்றும் கூறியிருந்தார். இந்த மீ டூ புகார், பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

வழக்குத் தாக்கல்
நானா படேகர், தமிழில் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம், ரஜினியின் காலா படங்களில் நடித்தவர். இதையடுத்து இந்தி நடிகர், நடிகைகள் பலர் தனுஸ்ரீக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். பின்னர் நானா படேகர் மீது, மும்பை ஓஸிவாரா போலீஸ் நிலையத்தில் தனுஶ்ரீ புகார் அளித்தார். போலீசார் விசாரித்தனர்.

வழக்குத் தாக்கல்
பின்னர் நானா படேகருக்கு எதிராக தேவையான சாட்சியங்கள் இல்லாததால், விசாரணையை தொடரமுடியவில்லை என கூறி முடித்துவிட்டனர். இதை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்துள்ளார் தனுஶ்ரீ தத்தா. கடந்த சில நாட்களுக்கு முன், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மீதும் புகார் கூறியிருந்தார் தனுஶ்ரீ.
இன்ஸ்டாகிராம்
அவர் மீது பல பெண்கள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். இருந்தும் பெரிய ஹீரோக்கள் அவரை ஏன் தங்கள் படங்களில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கின்றனர் என்று கேட்டிருந்தார். அவரை மொத்த சினிமா உலகமும் ஒதுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது பரபரப்பானது.

ஒழிக்க நினைத்தவர்களை
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் தனுஶ்ரீ. இதைக் கண்ட ரசிகர்கள் குஷியாயினர். அதில், சில ரசிகர்கள் ஆக்ரோஷமாகப் பதிவிட்டுள்ளனர். நீங்கள் மீண்டும் நடிக்க வரவேண்டும். உங்களை சினிமாவில் இருந்து ஒழிக்க நினைத்தவர்களுக்கு நடிப்பின் மூலமே பதிலடி கொடுக்க வேண்டும்.

அரக்கர்களின் வெற்றி
நீங்கள் நடிக்க வரவில்லை என்றால் அது அந்த அரக்கர்களின் வெற்றியாக ஆகிவிடும் என்று கூறியுள்ளனர். இன்னும் சிலர், எப்ப நடிக்க வரப் போறீங்க? உங்களுக்கு நாங்க துணையாக இருக்கிறோம் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். இதே போல பல ரசிகர்கள் அவரை சினிமாவில் நடிக்க மீண்டும் அழைத்துள்ளனர். அவரது இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











