முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் நன்மைகள்…. விழிப்புணர்வு குறும்படத்தில் விளக்கிய பிரபல நடிகை !

சென்னை : நடிகை தான்யா ரவிச்சந்திரன் கொரோனா விழிப்புணர்வு குறித்த குறும்படத்தில் நடித்துள்ளார்.

இக்குறும்படத்தில், முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் நன்மைகள் குறித்தும், அவை எவ்வாறு எளிமைப்படுத்தப் பட்டுள்ளது என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

கட்டில் திரைப்படத்தை இயக்கிய இவி கணேஷ் பாபு இக்குறும்படத்தை இயக்கி உள்ளார்.

மக்கள் பீதி

மக்கள் பீதி

கொரோனாவின் 2வது அலை மிகவும் தீவிரமாகி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசின் துரித நடிவடிக்கையால் கொரோனா தொற்றின் தீவிரம் சற்று குறைந்து வருகிறது. தற்போது 3வது அலை தொடர்பான அச்சுறுத்தல் பெரிய அளவில் அதிகரித்து, மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தி உள்ளது.

விழிப்புணர்வு விளம்பரம்

விழிப்புணர்வு விளம்பரம்

நடிகர் சிவகாத்திகேயன், ஜெயம் ரவி, நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கொரோனாவிலிருந்து நம்மை காத்துக்கொள்வது குறித்தும், தடுப்பூசியின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்திருந்தனர்.

முதல்வரின் காப்பீட்டுத் திட்டம்

முதல்வரின் காப்பீட்டுத் திட்டம்

கருப்பன் திரைப்படத்தில் நடித்த தான்யா ரவிச்சந்திரன் கொரோனா விழிப்புணர்வு குறித்த குறும்படத்தில் நடித்துள்ளார். அதில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பற்றியும், முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் எவ்வாறு எளிமைப்படுத்தப் பட்டுள்ளது என்பது குறித்தும் இந்த குறும்படத்தில் இடம் பெற்றுள்ளன. இக் குறும்படத்தை கட்டில் திரைப்படத்தை இயக்கிய இவி கணேஷ் பாபு இயக்கி உள்ளார். இந்த குறும்படம் அனைத்து முன்னணி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

அறிமுகம்

அறிமுகம்

பலே வெள்ளையத் தேவா திரைப்படத்தில் அறிமுகமான தான்யா, விஜய் சேதுபதியுடன் கருப்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு திறமையான நடிகை என்ற பெயரை பெற்றுத்தந்தது. இருப்பினும் இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. தமிழில் ஒரு படத்தையும், தெலுங்கில் ஒரு படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.

More from Filmibeat

Read more about: tanya ravichandran
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X