லிப் கிஸ்.. ரவிச்சந்திரன் பேத்திக்கு காதலிக்க நேரம் வந்துடுச்சு.. காதலர் யார் தெரியுமா? அட இவரா?
சென்னை: தன்யா ரவிச்சந்திரன் தமிழ் திரைப்படத்துறையில் தனி கவனத்தை ஈர்க்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். மறைந்த மலேசிய தமிழ் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான் நடிகை தன்யா ரவிச்சந்திரன். அபிராமி ஸ்ரீராம் என்பதுதான் இவருக்கு பெற்றோர்கள் சூட்டியப் பெயர் என்றாலும், இயக்குநர் மிஷ்கினின் ஆலோசனைப்படி தன்யா ரவிச்சந்திரன் என மாற்றி வைத்துக் கொண்டார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலருக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தனது காதலர் யார் என்பதையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தன்யா, சென்னையில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டமும், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்கில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். அவரது தாயார் லாவண்யா ஸ்ரீராம் பரதநாட்டியக் கலைஞர். அதனால், தன்யாவும் அவரது சகோதரி அப்பராஜிதாவும் சிறு வயதிலேயே பரதநாட்டியம் கற்று சென்னையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இது தனது சிறு வயதிலேயே மேடை பயத்தை போக்க தன்யாவுக்கு உதவி செய்தது மட்டும் இல்லாமல், நடிப்பு மீதான ஆர்வத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளது.
தன்யா கடந்த 2016-ல் வெளியான 'பலே வெள்ளையத்தேவா' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் சசிக்குமாருடன் இணைந்து நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே கவனம் பெற்றார். இருப்பினும், இப்படத்தில் இவருக்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்த அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2017-ல் வெளியான 'பிருந்தாவனம்' படத்தில் அருள்நிதி மற்றும் விவேக் உடன் இணைந்து நடித்தார். இப்படத்தில் இவரது கதாபாத்திரமும், நடிப்பும் பல பத்திரிகைகளால் பாராட்டப்பட்டது. குறிப்பாக, தி இந்து மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் இவரைப் புகழ்ந்து எழுதின.
பெயர் சொல்லும் படங்கள்: அதே ஆண்டில், விஜய் சேதுபதி மற்றும் பாபி சிம்ஹாவுடன் 'கருப்பன்' என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து, 'நெஞ்சுக்கு நீதி' (2022), 'மாயோன்', 'அகிலன்' மற்றும் 'ரசவாதி' (2024) ஆகிய படங்களில் நடித்து தனி கவனத்தை ஈர்த்து வருகிறார். 'ரசவாதி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் கருப்பன் பட காட்சிகள் இன்றைக்கும் பல இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தன்யா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
திடீர் கிளாமர்: திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பு, சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிகை சினேகாவுடன் இணைந்து நடித்தார். தொடக்கத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹோம்லி புகைப்படங்களை பகிர்ந்து வந்த தன்யா, சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் வெளியிட்ட பல புகைப்படங்கள் தன்யா ரவிச்சந்திரன் என்ன இப்படி மாறிட்டாங்க என யோசிக்கவைக்கும் அளவுக்கு இருந்தது.

காதல்: தன்யா ரவிச்சந்திரன் சொந்த வாழ்க்கையிலும் சரி, திரை வாழ்க்கையிலும் சரி நேற்று அதாவது ஜூலை 15ஆம் தேதி மிகவும் முக்கியமான நாளாக மாறியுள்ளது. அதாவது தன்யா தனது காதல் குறித்தும் காதலர் குறித்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பென்ஸ் திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுடன் 2025 ஜூலை 15 அன்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அதனை அவருக்கு உதட்டு முத்தம் கொடுத்தபோது எடுத்த சில்-அவுட் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்த ரவிச்சந்திரன் பேத்திக்கு காதலிக்க நேரம் வந்துடுச்சா என்று எல்லாம் கேள்வி கேட்டு வருகிறார்கள். அதேபோல் நேற்று எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் தன்யா நடித்துள்ள 'றெக்கை முளைத்தேன்' படத்தின் டீசர் 2025 ஜூலை 15 அன்று வெளியிடப்பட்டது.


Click it and Unblock the Notifications











