என் வீட்டு கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை.. நான் ஏன் பயப்பட வேண்டும்.. டாப்ஸி அதிரடி!
சென்னை: வருமான வரித்துறை சோதனை குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகை டாப்ஸி, என் வீட்டு கப்போர்டில் எலும்புக்கூடு இல்லை என தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக பல மொழிகளில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் டாப்ஸி.
தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமான டாப்ஸி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் பாலிவுட் என கலக்கி வருகிறார்.

6 மாதங்களில் 4 படங்கள்
ஆண்டுக்கு சராசரியாக 4 படங்களை கொடுத்து வருகிறார் டாப்ஸி. கடந்த 6 மாதங்களில் மட்டும் 4 படங்களில் நடித்து முடித்துள்ளார். 5வது படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது அனுராக் காஷ்யப் உடனான தோ பாரா படத்தில் நடித்து வருகிறார் டாப்ஸி.

ரூ.650 கோடி மோசடி
இந்த நேரத்தில் நடிகை டாப்ஸி மற்றும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், 650 கோடி ரூபாய் வரை வருமான வரி மோசடி நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

டாப்ஸியின் மடியில்..
இருப்பினும் இருவரும் அதைப்பபற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படவில்லை. டாப்ஸியின் மடியில் ஏறி அமர்ந்து கெத்தாக போட்டோ வெளியிட்டார் அனுராக் காஷ்யப். இந்நிலையில் நடிகை டாப்ஸி, தனது வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

ஃபுளுக்கால் இல்லை
அதில், பேசியுள்ள டாப்ஸி, நான் எப்போதும் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பேன். மக்களுக்கு என் மீது இப்படி ஒரு எண்ணம் என்னுடைய கடின உழைப்பால் வந்தது. ஃபுளுக்கால் இல்லை. இதை காப்பாற்றிக் கொள்ள நீங்கள் ஹார்டுவொர்க் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

எலும்புக்கூடுகள் இல்லை
இப்போது, நான் யார் என்பதை மக்கள் பார்த்திருப்பார்கள். இது ஒரு முன்தோற்றம் இல்லை. எனது கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை. என்னுடைய நேர்மை எனக்கு அச்சமின்றி இருப்பதற்கான நம்பிக்கையைத் தருகிறது. எனது வேலையை தாண்டி, மற்ற விஷயங்களில் நான் கொஞ்சம் சோம்பேறியாக இருக்கிறேன், அதனாலேயே என்னால் பொய் சொல்ல முடியாது.

அவசியம் இல்லை
ஒரு பொய்யை அதிக பொய்களால் மறைக்க நிறைய முயற்சி எடுக்க வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்வது நல்லது, ஆனால் மற்றவர்களை காயப்படுத்தும் வகையில் அல்ல. யாராவது ஒரு குறிப்பிட்ட தொனியில் என்னை குறிவைத்தாலும், அந்த நபருக்கு அதே முறையில் பதிலளிக்க வேண்டிய அவசியத்தை நான் உணரவில்லை.

விரலை காட்ட மாட்டேன்
அப்படி செய்தால் எங்களுக்குள் என்ன வித்தியாசம்? வாழ்க்கையை எளிமையான, அமைதியான முறையில் பார்க்க விரும்புகிறேன். நான் தவறு என்று கூப்பிடுவேன், ஆனால் தனிநபர்களை நோக்கி விரலை காட்ட மாட்டேன். இவ்வாறு டாப்ஸி தனது வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்து கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











