பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. மும்பை ஹீரோயின்களை அப்படி விளாசும் பிரபல நடிகை!

By

ஐதராபாத்: பட வாய்ப்புக்காக மும்பை ஹீரோயின்கள் எதையும் செய்வார்கள் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழில், ராஜ்பரத், அம்ஜத்கான் உட்பட பலர் நடித்த 'நட்பதிகாரம் 79' படத்தில் நடித்தவர், தெலுங்கு நடிகை, தேஜஸ்வி மடிவாடா.

தெலுங்கில், நாகார்ஜுனா நடித்த மனம், ஹார்ட் அட்டாக், சுப்ரமணியம் ஃபார் சேல், ஶ்ரீமந்துடு உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

சேலம் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தவருக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்ட 10 போலீஸ்

மும்பை ஹீரோயின்கள்

மும்பை ஹீரோயின்கள்

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இன்னும் பிரபலமான இவர், கமிட்மென்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் இப்போது அளித்துள்ள பேட்டி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் அவர் மும்பை ஹீரோயின்களை கடுமையாக சாடி இருக்கிறார். படவாய்ப்புக்காக அவர்கள் எதையும் செய்வார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

நானும் எதிர்கொண்டேன்

நானும் எதிர்கொண்டேன்

அவர் கூறியிருப்பதாவது: சினிமாவில் வாய்ப்பு தருவதாகச் சொல்லி பெண்களை 'கவர' நினைக்கும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் இந்த செயலில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற பிரச்னைகளை நானும் எதிர்கொண்டிருக்கிறேன். இதன் காரணமாக சினிமாவில் இருந்து வெளியேறிவிடலாமா என்று கூட முடிவு செய்தேன்.

வாய்ப்புக்காக

வாய்ப்புக்காக

பெரும்பாலான நடிகைகள், இந்த பிரச்னையை எதிர்கொள்கிறார்கள். சினிமா துறையில் 90 சதவிகிதம் இந்தப் பிரச்னை இருக்கிறது. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கத்தை சினிமாவில் இருந்து அடியோடு ஒழிக்க வேண்டும். மும்பை நடிகைகள், பட வாய்ப்புக்காக, மனரீதியாக இதற்கு தயாராகி விடுகிறார்கள்.

கூச்சப்படுவார்கள்

கூச்சப்படுவார்கள்

அதனால்தான், உள்ளூர் நடிகைகளை விட அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன.
தென்னிந்திய நடிகைகள் பிகினி உடை, முத்தக்காட்சி போன்றவற்றில் நடிப்பதற்கு கூட கூச்சப்படுவார்கள். அவர்களை ஒப்பந்தம் செய்ய இதுவும் ஒரு காரணம். பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் பற்றி தென்னிந்திய நடிகைகள் அறிந்திருந்தாலும் அதற்கு அவர்கள் தயாராக இல்லை.

முறித்துவிட்டார்

முறித்துவிட்டார்

நான் ஒருவரை காதலித்து வந்தேன். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தோம். ஆனால் அவர் என்னை பிரிந்துவிட்டார். அதற்கு காரணம், பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் வழக்கம் சினிமாவில் இருப்பதுதான். இதை நினைத்தே என் காதலை அவர் முறித்துவிட்டார். இவ்வாறு தேஜஸ்வி கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X