மருமகனுடன் கள்ளக்காதலா? உன் அம்மாவுக்கு இந்த நிலைமை வரக்கூடாது.. கதறிய நடிகை.. தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: தனது மருமகனுடன் இணைத்து தவறாக சித்தரித்து போட்டோ வெளியிட்ட நபர்களை கண்ணீர் மல்க சரமாரியாக விளாசியிருக்கிறார் நடிகை தாரா கல்யாண்.

Recommended Video

Thara Kalyan Illegal relationship? | Gossip | Mollywood Actress

பிரபல மலையாள நடிகை தாரா கல்யாண். கிளாசிக்கல் டான்ஸரான இவருக்கு, பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி ஆகிய நடனங்கள் அத்துப்படி.

எராளமான மலையாளப் படங்களில் நடித்துள்ள இவர், டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் தனது மகள் சவுபாக்கியா வெங்கடேஷ்க்கு திருமணம் செய்து வைத்தார் தாரா கல்யாண்.

கேவலமான கேப்ஷன்கள்

கேவலமான கேப்ஷன்கள்

இந்நிலையில் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில போட்டோக்களை எடிட் செய்த மர்ம நபர்கள் சிலர் நடிகை தாரா கல்யாணுக்கு தனது மருமகனுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக கூறி கேவலமான கேப்ஷன்களுடன் வைரலாக்கினர். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது.
இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார் நடிகை தாரா கல்யாண்.

கதறிய நடிகை

கதறிய நடிகை

இந்நிலையில் நடிகை தாரா கல்யாண், அந்த போட்டோக்கள் குறித்து கண்ணீர் மல்க குமுறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "சமீபத்தில், என் மகளின் திருமண கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மோசமான தலைப்புகளுடன் வைரலாகிவிட்டது. அதை பரப்பியவரிடம் ஒரு கேள்வி மட்டுமே கேட்கிறேன். உங்களுக்கு மனசே இல்லையா?

மன்னிக்க மாட்டேன்

மன்னிக்க மாட்டேன்

உங்களுக்கு வீட்டில் ஒரு தாய் இல்லையா? இப்படிதான் வளர்க்கப்பட்டீர்களா? நான் உன்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன், ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். நான் இப்போது அனுபவிக்கும் அதே வேதனையை உங்கள் அம்மா அனுபவிக்க கூடாது என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு கண்களில் கண்ணீர் வடிய கதறியிருக்கிறார் நடிகை தாரா கல்யாண்.

நாங்களும் மனிதர்கள்தான்

நாங்களும் மனிதர்கள்தான்

தனது வேதனையை வெளிப்படுத்திய கையோடு மேலும் பேசியிருக்கிறார் தாரா கல்யாண். அதாவது, சோஷியல் மீடியா ஒரு நல்ல பிளாட் ஃபார்ம். அதனை மற்றவர்களை காயப்படுத்த பயன்படுத்தக்கூடாது. பெண்களை கொஞ்சம் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள், அது தவிர்க்க முடியாதது. கலைஞர்களான நாங்களும் உணர்ச்சிகளைக் கொண்ட மனிதர்கள் தான்.

ஐ ஹேட் யூ

அந்த போட்டோவை உருவாக்கியவருக்கு, அதைக் கொண்டாடியவர்களுக்கு, மோசமான கருத்துக்களைத் தெரிவித்தவர்களுக்கு எல்லாம் நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான், நான் உன்னை வெறுக்கிறேன்" இவ்வாறு நடிகை தாரா கல்யாண் கூறினார். தாரா கல்யாணின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Read more about: actress video வீடியோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X