மீண்டும் வீடியோ வெளியிட்ட நடிகை தாரா கல்யாண்.. ஆனால் இது கதறல் இல்லை.. வேற மாதிரி!

சென்னை: நடிகை தாரா கல்யாண் மீண்டும் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

பிரபல மலையாள நடிகை தாரா கல்யாண். கிளாசிக்கல் டான்ஸரான இவருக்கு, பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி உள்ளிட்ட பல நடனங்கள் அத்துப்படி.

எராளமான மலையாளப் படங்களில் நடித்துள்ள இவர், டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் தனது மகள் சவுபாக்கியா வெங்கடேஷ்க்கு திருமணம் செய்து வைத்தார் தாரா கல்யாண்.

கேவலமான கேப்ஷன்கள்

கேவலமான கேப்ஷன்கள்

அவரது திருமண போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில போட்டோக்களை எடிட் செய்த மர்ம நபர்கள் சிலர், நடிகை தாரா கல்யாணுக்கு தனது மருமகனுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக கூறி கேவலமான கேப்ஷன்களுடன் வைரலாக்கினர்.

கதறல் வீடியோ

இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார் நடிகை தாரா கல்யாண். இதனை தொடர்ந்து தனது வேதனையை வெளிப்படுத்தி கதறல் வீடியோ ஒன்றை வெளியிட்டார். தாரா கல்யாணின் அந்த கதறல் வீடியோ பலரையும் கலங்க வைத்தது.

View this post on Instagram

Lalettan ❤️

A post shared by Thara Kalyan (@tharakalyan) on

கண்டனங்கள்

மலையாள திரைத்துறை பிரபலங்களும் சின்னத்திரை பிரபலங்களும் தாரா கல்யாணுக்கு ஆறுதல் கூறினர். அவரது போட்டோக்களை தவறான கேப்ஷன்களுடன் வெளியிட்டவர்களுக்கும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் அந்த விவகாரங்களில் இருந்து மீண்டு வந்துள்ளார் நடிகை தாரா கல்யாண்.

View this post on Instagram

Gokkale meichum kalichum chirichum

A post shared by Thara Kalyan (@tharakalyan) on

இளசுகளுக்கு டஃப்

தாரா கல்யாண் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார். பழையப்படி ஃபார்முக்கு வந்துள்ள தாரா கல்யாண் தொடர்ந்து டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இளசுகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் காதல் வசனங்களை பேசி சொக்க வைத்துள்ளார்.

Recommended Video

Velu in Quarantine | Vinoth Babu | Lock Down

டான்ஸரான..

அதோடு பாடல்களுக்கு நளினத்துடன் நடனமாடியும் அசர வைத்துள்ளார். தாரா கல்யாணின் இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஏற்கனவே டான்ஸரான தாரா கல்யாண் இந்த வயதிலும், நளினமாக நடனமாடியிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்நதுள்ளது.

More from Filmibeat

Read more about: video வீடியோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X