கூல் சுரேஷ் கீழ்த்தனமான ஆளு.. இவனலாம் யார் கூப்பிட்டா.. கடுப்பான நடிகை!
சென்னை: நடிகை அஸ்வினி சந்திரசேகர் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் கன்னி. இப்படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகி படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இப்படத்தை பார்த்துவிட்டு கருத்து சொல்லிய கூல் கூரேஷ் ஆபாசமாக பேசியதால், நடிகை தாரா கிருஷ் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கன்னி. அப்படத்தில், அஸ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மலைவாழ் மக்களிடையே இன்றும் நடைமுறையில் இருக்கும் சித்த மருத்துவத்தின் தனித்துவத்தை சொல்லும் படமாக அமைந்துள்ளது. ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு செபாஸ்டியன் சதீஷ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை சன் லைஃப் கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம். செல்வராஜ் தயாரித்துள்ளார்.

கூல் சுரேஷ்: மே 17ஆம் தேதி வெளியான இப்படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய கூல் சுரேஷ், இந்த படம் நல்ல கருத்தை சொல்லி இருக்கிறது. இந்த படத்தில் நடித்த நடிகை என் பக்கத்தில் இருக்கிறார். படத்தை அனைவரும் பார்த்து நல்லா இருக்குனு சொன்னாங்க, நீங்களும் படத்தை பாருங்க, முதலில் படத்தின் பெயர் கன்னி அதை தப்பா சொல்லிடாதீங்க என்று இரட்டை அர்த்தத்தில் பேசி இருந்தார்.
கீழ்த்தனமான பேச்சு: இவரின் பேச்சால் கடுப்பான நடிகை தாரா கிருஷ், இந்த படம் குடும்பங்கள் பார்க்க வேண்டிய படம், இந்த படத்தின் போஸ்டரை காட்டி, இது க இல்ல, வேற எழுத்து என்று விமர்சனம் செய்வது கண்டிக்கக்கூடியது. ஒரு படத்திற்கு தயாரிப்பாளர் கிடைப்பது பெரிய விஷயம், அப்படி ஒரு தயாரிப்பாளர் கிடைத்து இயக்குநர் ஒரு படத்தை வெளியிடுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். இப்படி கஷ்டப்பட்டு வெளியாகும் படத்தை விமர்சனம் என்ற பெயரில், தப்பு தப்பா பேசுவது கண்டிக்கக்கூடியது. இது கீழ்த்தனமான நடவடிக்கை, இவர யார் கூப்பிடுறீங்க என்று கூல் சுரேசை நடிகை கடுமையாக திட்டினார்.


Click it and Unblock the Notifications











