'நான் விஜய்யின் வெறித்தனமான ரசிகை..' - சொன்னது யார் தெரியுமா?
மும்பை : 'நான் நடிகர் விஜய்யின் வெறித்தனமான ரசிகை. அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்' என ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.
'மெர்சல்' படத்தின் சர்ச்சையைத் தொடர்ந்து விஜய்க்கு இந்தியா முழுவதும் இருந்து ஆதரவு கிடைத்தது. சினிமாத் துறையில் இருப்பவர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் பலரும் விஜய்க்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

தற்போது நடிகை பிரியங்கா சோப்ராவின் ட்விட்டர் ஃபாலோயர்களின் எண்ணிக்கை 20 மில்லியனை எட்டியுள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக தனது ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா.
#AskPC #20millionforPC எனும் ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன. அதில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, 'நான் விஜய்யின் தீவிர ரசிகை, அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்' என ட்விட்டரில் கூறியுள்ளார்.
பிரியங்கா சோப்ரா விஜய்யின் 'தமிழன்' படத்தின் மூலம்தான் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, ஹாலிவுட் லெவலுக்குப் போனாலும், தமிழில் பிரியங்கா மீண்டும் தலைகாட்டவில்லை.


Click it and Unblock the Notifications











