ரோஜாவின் செருப்பை எடுத்து வந்த ஊழியர்.. இதெல்லாம் ரொம்ப ஓவர் விளாசும் நெட்டிசன்ஸ் !
சென்னை : நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜா தனது ஊழியரை செருப்பை எடுக்க வைத்தது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
தென்னிந்திய திரை உலகில்,90 கால கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரோஜா. செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தமிழ் ஆடியன்சின் மனதில் இடம்பிடித்தார்.
இதையடுத்து, ரஜினி, சத்யராஜ், பிரபு, பிரபுதேவா,சிரஞ்சீவி உள்பட தென்னிந்திய ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ரோஜா
நடிகை ரோஜா மற்றும் இயக்குநர் செல்வமணி இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். ரோஜாவை வைத்து ஒரு சில படங்களை ஆர்கே செல்வமணி இயக்கிய நிலையில், இருவரும் காதலிக்கத் தொடங்கியதை அடைந்து, இருவரும் திருமணமும் செய்துக் கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகள் அன்ஷூகா மாலிகா சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் துருவ் விக்ரம் ஜோடியாக அவர் தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் அறிமுகமாக இருப்பதாகவும் செய்திகள் பரவின. ஆனால், ஆர்கே செல்வமணி மறுத்தார்.

தீவிர அரசியல்
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோஜா, 1999ம் ஆண்டு தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் 2009ம் ஆண்டு அக்கட்சியை விட்டு விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ரோஜா பின்னாளில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு தற்போது ஆந்திராவின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.

சர்ச்சையில் சிக்கிய ரோஜா
இந்நிலையில், ரோஜா நேற்று ஆந்திர மாநிலத்தில் உள்ள பாபட்லா சூர்யலங்கா கடற்கரையை பார்வை இடுவதற்காக சென்றியிருந்தார். இப்போது, கடற்கரையில் மணலில் இறங்கி நடக்கத் தொடங்கிய ரோஜா, திடீரென தண்ணீரில் இறங்கினார். அப்போது ரோஜா அணிந்து வந்த செருப்பை அவரது ஊழியர் கையில் வைத்து இருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாகி உள்ளது.

விளாசும் நெட்டிசன்ஸ்
இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், அமைச்சர் என்பதற்காக ஊழியரை செருப்பை எடுக்க வைப்பது எல்லாம் ரொம்ப ஓவர் என்றும், சக மனிதனைக்கூட ரோஜாவுக்கு மதிக்க தெரியவில்லை என்று நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











