Vidaamuyarchi: ரசிகர்களுடன் படம் பார்த்த த்ரிஷா.. வெற்றி தியேட்டரில் என்ன செய்தார் தெரியுமா?
சென்னை: அஜித் குமார் நடித்த விடாமுயற்சி படம் மிகப்பெரிய எதிர்பாப்புக்கு மத்தியில் இன்று வெளியாகி உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் 'விடாமுயற்சி'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் திரைப்படம் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் இதை திருவிழாப்போல கொண்டாடி வருகின்றனர்.
எச் வினோத் இயக்கத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்த துணிவு திரைப்படம், கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. அந்த திரைப்படம் வெளியான போது விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியானது. இதனால் அந்த பொங்கல் மிகப்பெரிய அளவில் தல தளபதி பொங்கலாக ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த கொண்டாட்டத்தில் ஒரு சில அசம்பாவிதங்களும் நடந்தன. வாரிசு படத்திற்கு பிறகு விஜய் நடித்த லியோ, கோட் என இரண்டு திரைப்படங்கள் வெளியான பின்பும் அஜித்தின் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை.

துணிவு திரைப்படம் வெளியான போதே, விடாமுயற்சி திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. ஆனால், அதன் பிறகு படம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில் படம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது. இதை அஜித்தின் ரசிகர்கள் திருவிழாப்போல கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் விடாமுயற்சி திரைப்படம் 925 தியேட்டரில் திரையிடப்பட்டது. தமிழக அரசும் ஸ்பெஷல் ஷோவிற்கு அனுமதி அளித்துவிட்டதால், அஜித் ரசிகர்கள் நள்ளிரவில் இருந்தே கொண்டாட தொடங்கிவிட்டார்கள்.
கொண்டாடிய ரசிகர்கள்: சென்னையின் அடையாளங்களில் ஒன்றான ரோகிணி தியேட்டரில் கூடிய அஜித் ரசிகர்கள், தல என்றும் கடவுளே அஜித்தே என்றும் கத்தி ஆர்பாட்டம் செய்தனர் அஜித் தன்னை தல, கடவுளே அஜித் என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட பிறகும், அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல், விடாமுயற்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தியேட்டருக்கு அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வந்திருந்தார். அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அவருக்கு திரையரங்க நிர்வாகத்தினர் உற்சாகமான வரவேற்பு கொடுத்துள்ளனர்.

த்ரிஷா செய்த வேலை: இப்படி விடாமுயற்சி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை த்ரிஷா சென்னை வெற்றி தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்த்து படம் பார்த்தார். படத்தின் ஆரம்பத்திலேயே அஜித், த்ரிஷாவின் சவேரிக்கா பாடல் வர ரசிகர்கள் அலப்பறை செய்தனர். இதற்கு ஈடாக நடிகை த்ரிஷாவும் எழுந்து நின்று செல்போனில் வீடியோ எடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
படம் சுமார் தான்: தமிழகத்தில் 9 மணிக்குத்தான் முதல் காட்சி என்றாலும், ஆந்திரா, தெலுங்கானாவில் 6..30 மணிக்கே படம் வெளியாகிவிட்டதால், ரசிகர்கள் எக்ஸ் தள பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர், அஜித் படம் என எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஹாலிவுட் படமான பிரேக் டவுனை அப்படியே ரீமேக் செய்து வைத்திருக்கின்றனர். நல்ல படம் தான். ஆனால், ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி பார்க்கும் அளவுக்கு எதுவுமே இல்லை. அஜித் மற்றும் த்ரிஷா காதல் போர்ஷனை மட்டும் நல்லா இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











