சிம்ரன்.. திரிஷா.. மீண்டும் இணையும் இரு இடுப்பழகிகள்!
சென்னை: 1980, 90களின் இளசுகளின் கனவு நாயகிகள் சிம்ரன் மற்றும் த்ரிஷா இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்பு 1999 ல் வெளியான ஜோடி திரைப்படத்தில் த்ரிஷா சிம்ரனின் தோழியாக ஒரே ஒரு காட்சியில் நடித்திருப்பார். நீண்ட இடைவெளிக்கு பின் இருவரும் பேட்ட படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஒன்றாக காட்சிகள் இருக்காது.

இருவரும் மீண்டும் இணையும் இப்படத்திற்கு சுகர் என பெயரிடப் பட்டுள்ளது. இந்த படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இந்த படத்தில் சிம்ரனும், த்ரிஷாவும் சகோதரிகளாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சதீஷ், ஜெகபதிபாபு, அபினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
கொரில்லா படத்தின் தயாரிப்பாளர் இப்படத்தையும் தயாரிக்கிறார். சந்தோஷ் தயாநிதி இசையிலும், ஒளிப்பதிவாளராக சரவணன் ராமசாமியும் பணியாற்றுகின்றனர். சென்னை, கேரளா, பிச்சாவரம், தாய்லாந்து போன்ற இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளதாகவும் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments


Click it and Unblock the Notifications