Actress Trisha: விடாமுயற்சி படத்திற்காக உடம்பை குறைக்கும் த்ரிஷா.. அட அப்படியா?
சென்னை: நடிகை த்ரிஷா சூர்யாவின் மௌனம் பேசியதே படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்யுடன் த்ரிஷா நடித்திருந்த லியோ படம் வெளியானது.
தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது.
நடிகை த்ரிஷா: நடிகை த்ரிஷா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சூர்யாவுடன் மௌனம் பேசியதே படம் மூலம் என்ட்ரி கொடுத்திருந்த த்ரிஷா, ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த 19ம் தேதி விஜய்யுடன் த்ரிஷா நடித்திருந்த லியோ படம் சர்வதேச அளவில் வெளியாகி வசூல்ரீதியில் சிறப்பாக அமைந்துள்ளது.
அஜித்தின் விடாமுயற்சி படம்: தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா. இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து துபாய், சென்னை உள்ளிட்ட இடங்களிலும் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டில் கோடை கொண்டாட்டமாக விடாமுயற்சி படம் வெளியாகவுள்ளது.
அழகை மெயின்டெயின் செய்யும் த்ரிஷா: முன்னதாக அஜித்துடன் த்ரிஷா மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிலையில், இந்தப் படத்திலும் இவர்களது கெமிஸ்ட்ரி சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் த்ரிஷா. ஆனாலும் 20 வயது நாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தன்னுடைய அழகை பராமரித்து வருகிறார். லியோ படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தாலும் இளவயது நாயகியாகவே ஜொலித்து வருகிறார்.
பிளாஷ்பேக் காட்சிக்காக ஸ்லிம்மாகும் த்ரிஷா: தொடர்ந்து பல ஆண்டுகளாகவே தன்னுடைய பிட்னசை சரியாக மெயின்டெயின் செய்து வருகிறார் த்ரிஷா. ஒரே மாதிரியான உடல்வாகுடன் ஒல்லியாகவே காணப்படும் இவர், விடாமுயற்சி படத்தில் வரும் ஒரு பிளாஷ்பேக் காட்சிக்காக தன்னுடைய உடல் எடையை குறைத்து மேலும் ஸ்லிம்மாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஒல்லியாக இருக்கும் த்ரிஷா மேலும் ஒல்லியாக உள்ளதாக கூறப்படுவது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: இந்த பிளாஷ்பேக் காட்சிகளுக்காக அஜித் தன்னுடைய உடலை எப்படி குறைத்து காட்டுவார் அல்லது தற்போது பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. முன்னதாக தன்னுடைய படங்களின்மூலம் மாஸ் இயக்குநராக அறியப்படும் மகிழ் திருமேனி, இந்தப் படத்தில் அஜித்தை எப்படி காட்டுவார் என்றும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகிவரும் இந்தப் படம் சூட்டிங்கை துவங்க தாமதமானாலும் தற்போது விறுவிறுப்பாக சூட்டிங் நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











