Actress Trisha: விடாமுயற்சியில் அர்ஜூன்.. மறைமுகமாக உறுதி செய்த த்ரிஷா!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள த்ரிஷா, தற்போது விடாமுயற்சி படத்தில் அஜித்தின் ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த சூட்டிங்கிற்காக கடந்த சில வாரங்களாக அசர்பைஜானில் த்ரிஷா உள்ளார். இதன் புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

இந்த சூட்டிங்கின் இடையில் லியோ படத்தின் சக்சஸ் மீட்டிலும் கலந்துக் கொண்டு ரசிகர்களை உறச்கப்படுத்தினார் த்ரிஷா.

Actress Trisha opens up indirectly about Actor Arjun in Ajiths Vidaamuyarchi movie


விஜய்யின் லியோ படம்: நடிகர் விஜய்யின் லியோ படத்தில் அவருக்கு ஜோடியாக, மனைவியாக, இரண்டு குழந்தைகளின் தாயாக நடித்து மாஸ் காட்டியிருந்தார் த்ரிஷா. 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்திருந்த இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்தமானதாக அமைந்தது. இரண்டாவது பாதியில் இவர்கள் இருவருக்கும் இடையில் அமைந்திருந்த லிப் லாக் காட்சியும் சிறப்பாக அமைந்திருந்தது. முன்னதாக படப்பிடிப்பின்போதும் விஜய் -த்ரிஷா இணைந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.

அஜித்தின் விடாமுயற்சி படம்: இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் இணைந்துள்ளார் த்ரிஷா. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் அசர்பைஜானில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. தொடர்ந்து துபாய், சென்னை போன்ற இடங்களிலும் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்த கட்டங்களில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக அஜித் உள்ளிட்டவர்களுடன் தற்போது அசர்பைஜானில் த்ரிஷா உள்ளார்.

லியோ சக்சஸ் மீட்டில் த்ரிஷா: இதனிடையே கடந்த 1ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்தார் த்ரிஷா. நிகழ்ச்சியில் அழகான புடவையில் வந்திருந்த அவரது லுக் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், லோகேஷ் கனகராஜ், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் அனைவரும் படம் குறித்தும் மற்ற சுவாரஸ்யங்களையும் பகிர்ந்திருந்தனர். த்ரிஷாவின் பேச்சும் அனைவரையும் கவர்ந்தது.

அர்ஜூன் குறித்து பேசிய த்ரிஷா: இந்த நிகழ்ச்சியில் பேசிய த்ரிஷா, நடிகர் அர்ஜூன் குறித்தும் பேசினார். விரைவில் அர்ஜூனுடன் மற்றொரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் விரைவில் இதுகுறித்து ரசிகர்களுக்கு தெரியவரும் என்றும் த்ரிஷா குறிப்பிட்டிருந்தார். முன்னதாக அஜித்துடன் த்ரிஷா மற்றும் அர்ஜூன் இருவரும் மங்காத்தா படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், மீண்டும் அவருடன் இணையவுள்ளது குறித்து த்ரிஷா பேசியுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் த்ரிஷா: ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் த்ரிஷா. மீண்டும் கமலுடன் KH234 படத்தில் இவர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இவர்களது காம்பினேஷனில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தன்னுடைய படங்களில் நாயகன் -நாயகியின் கெமிஸ்ட்ரியை சிறப்பாக காட்டும் மணிரத்னம் இந்தப் படத்தை இயக்கவுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான அறிமுக வீடியோவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X