Trisha :தனுஷ் படத்தில் இணையும் த்ரிஷா?.. அடுத்தடுத்து ஜாக்பாட்!

சென்னை : நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார். படத்தின் சூட்டிங் தற்போது மதுரையில் நடந்து வருகிறது.

இதற்காக மதுரையில் படக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். மதுரையில் சாதாரண சாலையில் ஜாக்கிங் செய்த தனுஷின் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கவுள்ள டி50 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actress Trisha going to join in Dhanushs Grand movie D50

தனுஷின் இயக்கத்தில் உருவாகும் டி50 படத்தில் இணையும் த்ரிஷா: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தன்னுடைய ரசிகர்களையும் இவர் தன்னுடைய படங்கள்மூலம் கவர்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் வெளியான வாத்தி, இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்து தெலுங்கு ஆடியன்சையும் இந்தப் படம் கவர்ந்தது. இந்தப் படம் மூலம் தன்னுடைய டோலிவுட் என்ட்ரியை தனுஷ் கொடுத்திருந்தார். முன்னதாக ஹாலிவுட், பாலிவுட் படங்களிலும் நடித்து இவர் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ள நிலையில், தற்போது மதுரையில் நடந்து வருகிறது. மதுரையில் ஜாக்கிங் செல்லும் தனுஷின் வீடியோவும் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் படம் பீரியட் படமாக உருவாகி வரும் நிலையில், நீண்ட தாடி, மீசை மற்றும் தலைமுடியுடன் தனுஷை பார்க்க முடிகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களில் கமிட்டாகியுள்ளார் தனுஷ். அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி50 படத்தை இயக்கவுள்ளார். ப பாண்டி படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ளது டி50 படம். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தப் படம் குறித்த அப்டேட்களை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Actress Trisha going to join in Dhanushs Grand movie D50

இதனிடையே இந்தப்படம் மிகவும் அதிகமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தனுஷ் இயக்கத்தில் த்ரிஷா இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. வடசென்னை போன்று கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ள டி50 படத்திற்கான லொகேஷன்களை பார்க்கும் வேலைகளையும் படக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் த்ரிஷா இணையவுள்ளது அவரது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித் -மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் விடாமுயற்சி படத்திலும் கமலின் KH234 படத்திலும் இணையவுள்ளார். இந்நிலையில் தற்போது தனுஷுடன் அவர் இணையவுள்ளது மிகுந்த சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் 50வது படத்தில் த்ரிஷா இணைந்துள்ளார். முன்னதாக அஜித்தின் 50வது படமான மங்காத்தா படத்தில் த்ரிஷா ஜோடியாக நடித்த நிலையில், தற்போது தனுஷின் 50வது படத்திலும் அவர் இணையவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X