என்னாது.. ஆடுகளத்தில் த்ரிஷா நடிச்சிருக்கணுமா.. என்னாச்சு… வைரலாகும் புதுப் படம்!
சென்னை : ஆடுகளம் படத்தில் த்ரிஷா தனுஷ் நடித்த போது எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
கோ படத்தில் ஜீவாவுக்கு பதில் சிம்பு தான் நடித்திருந்தார். சில காரணங்களால் அப்படத்தில் இருந்து சிம்பு வெளியேறினார். சிம்பு நடித்த சில புகைப்படங்கள் நேற்று வெளியாகி வைரலாகின.
அதே போல தற்போது ஆடுகளம் படத்தில் த்ரிஷா நடித்த வெளிவராத புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

தேசிய விருது
சேவல் சண்டையை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படம் தான் ஆடுகளம். இந்த படத்தில் மதுரை மண்ணின் பேச்சு வழக்கையும், களத்தையும் இயல்பாக காட்டி ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் படி படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் வெற்றி மாறன். இப்படம் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், ஒளிப்பதிவாளர் உள்பட 6 பிரிவுகளில் தேசிய விருதை வென்றது.

அறிமுகம்
நடிகை டாப்ஸி அறிமுகமான முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும். இந்த படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக ஐரின் என்ற கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்திருப்பார். இந்த படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில், ஸ்ரேயா சரண் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டதால் வெளியேறினார்.

ஆடுகளத்தில் த்ரிஷா
இதையடுத்து, ஆடுகளம் திரைப்படத்தில் ஒப்பந்தமான த்ரிஷா தனுஷூன் சில காட்சிகளில் நடித்திருந்தார். ஆனால், இவர் கௌதம் மோனனின் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்து வந்ததால் கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டு சில காட்சிகளில் மட்டுமே நடித்து படத்திலிருந்து வெளியேறினார்.

வரிசையாக படங்கள்
இந்நிலையில் தற்போது, த்ரிஷாவும் தனுஷூடம் நடித்த அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. த்ரிஷா தற்போது மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். கர்ஜனை, சதுரங்கவேட்டை, ராங்கி ஆகிய படங்கள் தற்போது வெளிவரத் தயாராக உள்ளன.


Click it and Unblock the Notifications











