GOAT Matta Song: எனக்கு ரொம்ப புடுச்சவங்களோட அன்னைக்குத்தான்.. சஸ்பென்ஸ் குறித்து மனம் திறந்த த்ரிஷா

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தி கோட். இந்தப் படம் விஜய்யின் 68வது படமாகும். படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் படக்குழுவினர் நடத்திய செய்தியாளார்கள் சந்திப்பில் தொடங்கி, புரோமோசன் நிகழ்ச்சிகள் வரை பலமுறை கேட்கப்பட்ட கேள்வி, படத்தில் த்ரிஷா இருக்காங்களா என்பதுதான். ஆனால் படக்குழுவினர் இந்த கேள்விக்கு படத்தில் த்ரிஷா இல்லை என பதில் அளித்து வந்தனர். மட்ட பாடல் ரிலீஸ் ஆனபோதுகூட த்ரிஷா எங்கே என்ற கேள்வி எழுந்தது.

படம் ரிலீஸானபோதுதான், மட்ட பாடலுக்கு த்ரிஷா நடனமாடியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இந்நிலையில் படத்தில் மட்ட பாடலுக்கு நடிகை த்ரிஷா நடனமாடியுள்ளார். இந்நிலையில் மட்ட பாடலுக்கு நடனமாடியது தொடர்பாக நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

trisha vijay goat matta song

விஜய் சினிமாவில் இருந்து விலகவுள்ளதால், இந்தப் படத்தின் மீது, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தினை விஜய்யின் அனைத்து தரப்பு ஆடியன்ஸும் கொண்டாடவேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாடு மட்டும் இல்லாமல், அண்டை மாநிலங்களிலும் படத்தினை ரிலீஸ் செய்துள்ளார் என்றே கூறவேண்டும்.

trisha vijay goat matta song

கோட் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். இப்படத்தில் இவருடன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், ஜெய்ராம், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் படத்தில் கேமியோவாக நடித்துள்ளார். மட்ட பாடலுக்கு த்ரிஷா நடனமாடியுள்ளார்.

trisha vijay goat matta song

மட்ட பாடல்: படத்தின் ட்ரைலர் ரிலீஸ் செய்யப்பட்டபோது செய்தியாளர்கள் படத்தில் த்ரிஷா இருக்கின்றாரா என்ற கேள்வியை படக்குழுவினரைப் பார்த்து எழுப்பினர். ஆனால் படக்குழுவினர் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்காமல், தொடர்ந்து நழுவிக் கொண்டே இருந்தனர்.

ஒரு சில இடங்களில் படத்தில் த்ரிஷா இருக்காங்களா? என செய்தியாளர்களையே பதில் கேள்வி கேட்டனர். இதற்கு காரணம், படம் குறித்த அனைத்து விஷயங்களையும் கூறிவிட்டால் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் இருக்காது என்பதற்காக த்ரிஷா மட்ட பாடலுக்கு நடனமாடியதை மறைத்து வந்துள்ளனர்.

trisha vijay goat matta song

த்ரிஷா: படம் ரிலீஸ் ஆன தினத்தில் படத்தின் தயாயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நடிகை த்ரிஷாவுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார். அந்த பதிவு வைரலானது. இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்ட பாடலுக்கு நடனமாடியது குறித்து பகிர்ந்துள்ளார். அதில், " கடந்த மார்ச் 5ஆம் தேதி எனக்கு பிடித்தவர்களுடன் நடந்த சிறிய குத்தாட்டாம்" என பதிவிட்டுள்ளார். மேலும் இந்தப் பதிவோடு சில புகைப்பட்டங்களையும், ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

trisha vijay goat matta song

கில்லி: படத்தின் இரண்டாம் பாதியில் வரும் மட்ட பாடலுக்கு விஜய் மற்றும் த்ரிஷா நடனமாடினர். இது ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது. மேலும், இந்தப் பாடலில், கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான கில்லி படத்தில் இடம் பெற்றுள்ள அப்படிபோடு பாடலில் வரும் நடன அசைவுகளும் இருந்ததால், ரசிகர்கள் மேலும் குஷி ஆகினர்.

trisha vijay goat matta song

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X