பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ராணி லுக்கிலேயே வந்த த்ரிஷா!
சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் அவரது கனவு திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம்.
இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு இன்றைய தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கமல் மற்றும் ரஜினி கலந்துக் கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படம்
நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷமி, ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம். இந்தப் படம் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு ப்ராஜெக்டாக உருவாகியுள்ளது.

செப்டம்பர் 30ல் ரிலீஸ்
படம் வரும் 30ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது. இந்தியாவில் பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் மிகவும் பிரம்மாண்டமாக சென்னை மற்றும் ஐதராபாத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

இசை வெளியீட்டு விழா
நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு இந்த நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி மற்றும் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ள நிலையில், 5 மொழிகளில் 5 பிரபலங்கள் இந்தப் படத்தின் ட்ரெயிலரை வெளியிட உள்ளனர்.

சிறப்பு விருந்தினர்கள்
இந்தப் படத்தை முன்னதாக தன்னுடைய சொந்த தயாரிப்பில் தயாரிக்க திட்டமிட்ட கமல்ஹாசன் அந்த முயற்சி நிறைவேறாமல் கைவிட்டார். இந்நிலையில் அவர் இந்தப் படத்தின் இசை வெளியீட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்வது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

அழகான லுக்கில் த்ரிஷா
இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா குந்தவை கேரக்டரில் நடித்துள்ளார். இவரது போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இன்றைய தினம் அவர் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் அழகான லுக்கில் கலந்துக் கொண்டார். மிகவும் கிராண்டான உடையில் ராணியை போன்ற அசத்தலான லுக்கில் அவர் காணப்பட்டார்.

மரியாதையை வெளிப்படுத்திய த்ரிஷா
அரங்கத்தில் அவர் நுழைந்ததும் கேமரா கண்களில் சிக்கினார். அவரை அழகாக படம் பிடித்த கேமராமேன்கள், பின்னரே அவரை அரங்கத்திற்குள் செல்ல அனுமதித்தனர். உள்ளே நுழைந்த த்ரிஷா, மணிரத்னத்தை ஆரத்தழுவி தன்னுடைய மரியாதையை வெளிப்படுத்தினார்.


Click it and Unblock the Notifications











