Trisha: சூர்யா 45 சூட்டிங்கில் இணைந்த திரிஷா.. கோவையில் படக்குழுவினர் செய்த பிரம்மாண்டம்!
பொள்ளாச்சி: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் கடந்த மாதத்தில் வெளியாகி மிகவும் சொதப்பலான முடிவையே கொடுத்துள்ளது. சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை கவரவில்லை. சிறிய பட்ஜெட் படமாகவே இருந்தாலும் படத்தின் கதைக்களம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப்படமும் தற்போது உதாரணமாகியுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்தப் படத்திற்கு கல்ட் என்று பெயரிட கார்த்திக் சுப்புராஜ் யோசித்த நிலையில் அந்த டைட்டிலை நடிகர் அதர்வா பதிவு செய்துள்ளதாகவும் டைட்டிலை அவர் தர மறுத்ததாகவும் தகவல்கள் வௌயாகியுள்ளன. இந்நிலையில் அடுத்ததாக சூர்யா 45 படத்தின் சூட்டிங்கில் பிசியாகியுள்ளார் சூர்யா.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தின் பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள இந்த படத்தின் சூட்டிங் அந்தமான், ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் கல்ட் என்ற டைட்டிலை கார்த்திக் சுப்புராஜ் யோசித்ததாகவும் ஆனால் அந்த டைட்டலை பதிவு செய்துள்ள நடிகர் அதர்வா தர மறுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொதப்பிய கங்குவா: இதையடுத்து சூர்யா 44 படத்திற்கு வேறு ஒரு டைட்டிலை கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . இந்தப் படத்தின் பிரமோஷன்கள் இந்த மாதத்தில் துவங்கவுள்ளதாக முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ள நிலையில், விரைவில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. சூர்யாவின் கங்குவா படம் கடந்த மாதத்தில் ரிலீசாகி மிகவும் சொதப்பலான முடிவை கொடுத்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்த படத்திற்காக அவர் மற்ற படங்களில் நடிக்காமல் காத்திருந்த நிலையில் படம் அவருக்கு சொதப்பலாக அமைந்துள்ளது.
சூர்யா 45 படம்: இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சூர்யா 44 படத்தை சூர்யா அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்நிலையில் அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா இணைந்துள்ள சூர்யா 45 படத்தின் ஷூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் உள்ள மாசாணி அம்மன் கோயில் பூஜையுடன் துவங்கியுள்ளது. படத்தில் சூர்யாவுடன் திரிஷா, சுவாசிகா நட்ராஜ் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆர்ஜே பாலாஜி இயக்கவுள்ளதாக கூறப்பட்ட மாசாணி அம்மன் கதைக்களத்தில் தான் சூர்யா தற்போது இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சூர்யாவுடன் சூட்டிங்கில் இணைந்த திரிஷா: இந்நிலையில் கோவையில் இன்றைய தினம் இந்த படத்தின் சூட்டிங்கில் நடிகை திரிஷா இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக பிரம்மாண்டமான வகையில் கோவில் செட் போடப்பட்டுள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் இந்த படத்தில் திரிஷா இணைந்துள்ளார். பல ஆண்டுகள் கழித்து இவர்கள் மீண்டும் இணைந்துள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்துவரும் சூர்யா நடிப்பில் அடுத்த ஆண்டிலேயே இரு படங்கள் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications