For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தோழிகளுடன் சோபாவில் கட்டிப்புரளும் த்ரிஷா..வீக் எண்ட் கொண்டாட்டமா? அதுக்குனு ஒரு அளவு வேண்டாமா?

  |

  சென்னை : நடிகை த்ரிஷா தோழிகளுடன் சோபாவில் கட்டிப்புரளும் வீடியோ ஒன்று இணையத்தில் டிராண்டாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர்.

  Recommended Video

  தோழிகளுடன் சோபாவில் கட்டிப்புரளும் த்ரிஷா..வீக் எண்ட் கொண்டாட்டமா?

  தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி நாயகியாக இருப்பவர் த்ரிஷா. 1999 ஆம் ஆண்டு ஜோடி படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் திரையுலத்திற்கு அறிமுகமானார்.

  பின்னர் லேசா லேசா படத்தில் பிரியதர்ஷினியாக நடித்திருந்தார். இந்த பட வெளியீட்டிற்கு தாமதமானதால் மௌனம் பேசியதே இவரின் முதல் நாயகிக்கான அறிமுகப்படமாக சொல்லப்படுகிறது. பின்னர் மனசெல்லாம் என்னும் படத்தில் நோய்வாய்ப்பட்ட நாயகியாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் வரவேற்பை பெறவில்லை.

  சமந்தா, த்ரிஷா வரிசையில் கீர்த்தி சுரேஷ்: தளபதி 67 படத்தில் விஜய்யை ரவுண்டு கட்டும் ஹீரோயின்கள்சமந்தா, த்ரிஷா வரிசையில் கீர்த்தி சுரேஷ்: தளபதி 67 படத்தில் விஜய்யை ரவுண்டு கட்டும் ஹீரோயின்கள்

  நடிகை த்ரிஷா

  நடிகை த்ரிஷா

  ஹரி இயக்கத்தில் வெளியான சாமி படம் நல்ல வெற்றிகளை பெற்றது. பிராமண பெண்ணாக விக்ரமுக்கு ஜோடியாக நடித்த இவர் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இவருக்கு சிறந்த நடிகைக்கான விருதுகள் பலவற்றையும் பெற்றுக் கொடுத்தது. இதையடுத்து, தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா. ரஜினிகாந்த, கமல், அஜித், விஜய், தனுஷ், சூர்யா என டாப் நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார்.

  இன்னும் திருமணமாகவில்லை

  இன்னும் திருமணமாகவில்லை

  40 வயதை நெருங்கும் நடிகை த்ரிஷா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. த்ரிஷாவுக்கும், தொழில் அதிபர் வருண் மணியன் என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருப்பினும், இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நின்றதுடன் நிச்சயதார்த்தமும் முறித்துக் கொள்ளப்பட்டது. இதன்பின்னர் தெலுங்கு நடிகர் ஒருவருடன் இணைத்து த்ரிஷா கிசுகிசுக்கப்பட்டார்.

  அரசியலா?

  அரசியலா?

  நடிகை த்ரிஷா அரசியலில் இறங்கப்போவதாக சமீபத்தில் கோலிவுட்டில் பரபரபப்பாக பேசப்பட்டது. த்ரிஷாவுக்கு அரசியலில் சேரும் எண்ணமில்லை. இப்படி ஒரு செய்தி எங்கிருந்து வந்தது, எப்படி பரவியது என்று தெரியவில்லை. அதில் துளியளவும் உண்மையில்லை என்று அரசியல் கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அவரது அம்மா.

  தளபதி 67

  தளபதி 67

  நடிகை த்ரிஷா லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.ஆனால் இந்தப் படத்தில் விஜய்க்கு அவர் ஜோடியா அல்லது வில்லியா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. 16 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

  குந்தவை

  குந்தவை

  த்ரிஷா தற்போது பொன்னியின் செல்வன், சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது ராம் முதல் பாகம், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், தி ரோட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது.

  வீக் எண்ட் அலப்பறை

  வீக் எண்ட் அலப்பறை

  திரைப்படங்களில் படுபிஸியாக இருந்து வரும் த்ரிஷா, வீக் எண்டில் அவ்வப்போது தன்னுடைய நண்பர்களுடன் ஜாலியாக பொழுதை கழிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை தனது பெண் தோழிகளுடன் த்ரிஷா அலப்பறை செய்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

  என்ன திரிஷா சரக்கா?

  என்ன திரிஷா சரக்கா?

  அந்த வீடியோவில் த்ரிஷா சோபாவில் படுத்து இருக்க அவர் மீது அவரது தோழி கட்டி அணைத்து புரளுகிறார். பின்னர், த்ரிஷா தனது மற்றொரு தோழியை அழைக்க அவரும் த்ரிஷாவை கட்டிபிடித்து புரளுகிறார். ஒரே சோபாவில் 4 பேர் கட்டி பிடித்து அட்ராசிட்டி செய்த வீடியோ பார்த்த ரசிகர்கள் என்ன த்ரிஷா இது எல்லாம் என்றும், அலப்பறைக்கு ஒரு அளவு வேண்டாமா என்றும் கேட்டு வருகின்றனர். வீடியோவை உன்னிப்பாக பார்த்த ரசிகர்கள் ஒரு கண்ணாடி கிளாஸ் உள்ளதை பார்த்து அது சரி, சரக்கா? என்று கேட்டு வருகின்றனர்.

  English summary
  Actress Trisha Enjoying Her weekend With Her Friends video trending on social media
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X