‘லியோ‘ ஷூட்டிங்கிலிருந்து திடீரென சென்னை திரும்ப இதுதான் காரணம்.. திரிஷா கொடுத்த விளக்கம்!

சென்னை : காஷ்மீரில் நடைபெற்று வரும் லியோ படப்பிடிப்பில் இருந்து திரிஷா, திடீரென சென்னை திரும்பியதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

விஜய், லோகேஷ் கூட்டணியில் உருவாகும் லியோ படம் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைக்கும் என இணையத்தில் இப்போதே தகவல்கள் கசிந்து வருகின்றன.

இப்படத்தில் விஜய்,திரிஷா,அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், சாண்டி, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு விக்ரம் படம் வெளியாகி மகத்தான வெற்றியை பெற்றது. இந்த படத்தை அடுத்து லோகேஷ் இயக்க உள்ள படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் தளபதி 67ல் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு லியோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

LCU கட்டாயம் இருக்கும்

LCU கட்டாயம் இருக்கும்

இப்படத்தின் ப்ரோமோ வீடியோவை பார்ப்பதற்கு விக்ரம் படத்தின் டைட்டில் ப்ரோமோவை போலவே இருக்கிறது என நெட்டிசன்கள் கருத்துக்கூறி வருகின்றனர். கைதி படத்தில் நடித்த ஜார்ஜ் மரியனும், விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டினா நடித்த வசந்தியும் இப்படதில் இணைந்துள்ளதால், இப்படத்திலும் LCU கட்டாயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு மொழிகளில்

நான்கு மொழிகளில்

விக்ரம் படம் 500 கோடி வசூலித்த நிலையில், லியோ திரைப்படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பான் இந்திய படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்ற அறிவித்துள்ளதால், லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சென்னை திரும்பிய திரிஷா

சென்னை திரும்பிய திரிஷா

லியோ படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்ற திரிஷா மூன்று நாட்களிலேயே சென்னை திரும்பினார். படப்பிடிப்புக்கு போன வேகத்திலேயே திரிஷா சென்னை திரும்பியதால், திரிஷா லியோ படத்திலிருந்து விலகி விட்டதாகவும், லோகேஷூக்கும் திரிஷாவுக்கும் பிரச்சனை என்று பல விதமான கருத்துகள் இணையத்தில் தீ போல பரவியது.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

இந்நிலையில், நடிகை திரிஷா திடீரென சென்னை வந்ததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது லியோ படப்பிடிப்பு நடக்கும் காஷ்மீரில் அதிகப்படியான குளிரும், பனியும் இருப்பதால், திரிஷாவால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லையாம். இதனால், போனதுமே அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவர் உடனே சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X