திரிஷாக்கும் லோகேஷ் கனகராஜுடன் என்னதான் பிரச்சனை? லியோ படத்திலிருந்து விலகினாரா?
சென்னை : நடிகை திரிஷாவுக்கும் லோகேஷ் கனகராஜுக்கும் பிரச்சனை ஏற்பட்டு திரிஷா லியோ படத்திலிருந்து விலகி விட்டதாக சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரவி வருகின்றன.
கடந்த வாரம் முழுவதும் சோஷியல் மீடியாவே திணறும் அளவுக்கு தளபதி 67 படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகின. படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பூஜை வீடியோ, ப்ரோமோ வீடியோ, தளபதி 67 படத்தின் டைட்டில், ரிலீஸ் தேதி என ஒட்டுமொத்த அப்டேட்டையும் தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து அறிவித்துள்ளது.
அனைத்து அப்டேட்டுகளும் வெளியாகி விட்டதால், ஒட்டுமொத்த ரசிகர்களும் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.

லோகேஷ் கனகராஜின் லியோ
மாநகரம்,கைதி,மாஸ்டர், விக்ரம் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கி வரும் படம் லியோ. இப்படத்தின் மூலம் விஜய் மற்றும் லோகேஷ் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இதில், விஜய், திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் ஆகியோர் கமிட்டாகி உள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

படத்தின் ரிலீஸ் தேதி
ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு இப்படம் அக்டோபர் 19ந் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. லியோ படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை சன் டிவியும், ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றி உள்ளது.

போனவேகத்தில் திரும்பிய திரிஷா
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்புக்காக ஒட்டுமொத்த டீமும் காஷ்மீரில் இருக்கும் நிலையில், நடிகை திரிஷா மட்டும் மூன்று நாளில் சென்னை திரும்பினார். திரிஷா போன வேகத்தில் திரும்பி வந்ததால், ரசிகர்கள் பலரும் இந்த படத்தில் ஹீரோயின் இல்லை என்றும், படம் ஆரம்பிக்கும் போதே ஹீரோயினை கொன்னுட்டீங்களா என்றும் மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கிண்டலடித்தனர்.

லியோ படத்திலிருந்து விலகினாரா?
இந்நிலையில், நடிகை திரிஷா சென்னை திரும்பிய வேகத்தில், தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்த லியோ படம் குறித்து இவர் ரீட்வீட் செய்த ட்வீட்களை டெலிட் செய்தார். இதனால், திரிஷா லியோ படத்தில் இருந்து விலகியதாகவும், அவருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் தான் காஷ்மீரில் இருந்து உடனே வந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தேவையில்லாத வதந்தி
ஆனால், திரிஷாவின் ஒரு சில நலம் விரும்பிகள் தேவை இல்லாத செய்தியை பரப்பாதீர்கள் என்றும், நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் Pinned postல் லியோ பட பூஜையின் போது திரிஷாவும் விஜய்யும் சேர்ந்து இருக்கும் போட்டோவை டெலிட் செய்யவில்லை என்றும். வழக்கமாகவே திரிஷா தான் ரீ-ட்வீட் செய்வதை ஒரு சில நாட்களில் டெலீட் செய்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார் என்றும் அப்படித்தான் லியோ படம் குறித்து சில பதிவுகளை நீக்கியதாக சொல்லப்படுகிறது.

ஆர்வமாக இருக்கும் திரிஷா
எனவே, திரிஷா லியோ படத்தில் இருந்து விலகியதாக பரவி வரும் செய்தி வெறும் வதந்திதான் என்று சொல்லப்படுகிறது. லியோ திரைப்படம் நடிகர் விஜய்க்கு மட்டும் 67வது படம் இல்லை, நடிகை திரிஷாவுக்கும் 67 வது படம் என்பதால், இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிப்பதில் நடிகை திரிஷா ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











