ப்ளீஸ் அப்டேட் கேட்காதீங்க..மணி சார் என்னை கொன்னுடுவார்.. பொன்னியின் செல்வன் மேடையில் பதறிய த்ரிஷா!

சென்னை : பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் Antham வெளியீட்டு விழாவில் பேசிய த்ரிஷா, ப்ளீஸ் அப்டேட் கேட்காதீங்க என்று மேடையில் பேசினார்.

டிரைலர் வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

actress trisha krishnan speech at ponniyin selvan part 2 anthem launch

முதல் பாகம் போல, இரண்டாம் பாகமும் பெரும் வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ரூ 500 கோடி வசூல் : பொன்னியின் செல்வன்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் பான் இந்திய திரைப்படமாக தமிழ்,தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய்வரை வசூலித்தது. படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயராம், பிரபு, விக்ரம்பிரபு,நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

திக்கு முக்காடிப்போன த்ரிஷா : பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ந் தேதி வெளியாக உள்ள நிலையில், நேற்று சென்னை அண்ணா பல்கலைகழத்தில் வைத்து Ps2 Antham வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர்கள் த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். த்ரிஷா மேடையேறி பேசத்தொடங்கியதும், அங்கிருந்த மாணவர்கள் லியோ படத்தின் அப்டேட்டை கேட்டு லியோ, லியோ என கத்தத் தொடங்கினர். இதனால்,திக்கு முக்காடிப்போன த்ரிஷா அதை அப்புறமாக பேசலாம் என்று ரசிகர்களை சமாதானப்படுத்தினார்.

actress trisha krishnan speech at ponniyin selvan part 2 anthem launch

அனைவருக்கும் நன்றி : இதைத்தொடர்ந்து பேசிய த்ரிஷா, முதலில் உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி. குந்தவை கதாபாத்திரத்திற்கு இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்த படத்திற்காக நாங்கள் கடுமையாக உழைத்து இருக்கிறோம். இருந்தாலும், குந்தவை என்ற கதாபாத்திரம் இந்த அளவுக்கு வைரலானதற்கு காரணம் நீங்கள்தான். அதற்கு மிகவும் நன்றி.

actress trisha krishnan speech at ponniyin selvan part 2 anthem launch

மணி சார் கொன்னுடுவாரு : பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இன்னும் சிறப்பாக இருக்கும், எனக்கும் கார்த்திக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியை பற்றி நிறைய பேர் பேசினார்கள். பார்ட் 1ல் இருந்தது போல ஒரு காதல் காட்சி இரண்டாம் பாகத்திலும் இருக்கும். முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தில் ஆக்‌ஷன் அதிகமாக இருக்கும், பாஸ்டா இருக்கும், இதுக்கு மேல சொன்னா மணி சார் என்னை கொன்னுடுவாரு இன்னும் இரண்டு வாரம் தான் இருக்கு தியேட்டரில் போய் பாருங்க என்று த்ரிஷா பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X